சென்னை விமான நிலையத்தில் வாலிபர் கடத்தல்
சென்னை:
சிங்கப்பூரிலிருந்து ஒரு கும்பல் கொடுத்தனுப்பிய தங்க நகைகளுடன் சென்னைவந்தவரை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து கடத்திச் சென்றது ஒரு கும்பல்.
அவரை விடுவிக்க ரூ. 1 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய அந்தக் கும்பலை சென்னைபோலீஸார் மின்னல் வேகத்தில் செயல்பட்டு வளைத்துப் பிடித்தனர்.நெல்லை மாவட்டம் திருச்சிற்றம்பலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன்.சிங்கப்பூரில் கடந்த ஒரு வருடமாக வேலை பார்த்து வருகிறார். 2 நாட்களுக்கு முன்புஅவர் சென்னை கிளம்பினார்.
சிங்கப்பூர் விமான நிலையத்தில் அவரை சந்தித்த ஒரு கும்பல் சென்னையில் கிரிபாபுஎன்பவரிடம் கொடுத்துவிடுமாறு கூறி ஒரு நகை பொட்டலத்ததை அவரிடம் தந்தது.இதற்காக அவருக்கு கமிஷனும் தரப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் அவரை சந்திக்க கிரிபாபுவிடம் நகை பொட்டலத்தைதந்தார் பாலமுருகன். அப்போது இன்னொரு பொட்டலம் எங்கே என்று கிரிபாபுகேட்கவே, ஒரு பொட்டலம் தான் தந்தார்கள் என்று கூறிவிட்டு கிளம்பினார்பாலமுருகன்.
விமான நிலையத்திலிருந்து வெளியேறிய அவர் நெல்லை செல்வதற்காக டாக்ஸிபிடிக்க வந்தார். அப்போது கிரிபாபு தலைமையில் ஒரு கும்பல் அவரை வழிமறித்துகாரில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து பறந்தது.
கடத்தப்பட்ட பாலமுருகன், கோயம்பேடு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள ஒருவீட்டில் சிறை வைக்கப்பட்டார்.
பின்னர் பாலமுருகனின் தந்தை மருதையாவுக்கு அக் கும்பல் போன் செய்தது.உங்களது மகன் எங்களது பிடியில் உள்ளார். அவரை பத்திரமாக விடுவிக்கவேண்டுமானால் ரூ. 1 லட்சம பணத்தை கொடுக்க வேண்டும் எனறு அக்கும்பல்மிரட்டியது.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மருதையா உடனடிாயக சென்னைக்கு வந்தார்.குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு அவரை வருமாறு கடத்தல்கும்பல் பணித்தது.மருதையாவும் அந்த வீட்டிற்குப் பானார்.
அங்கு பாலமுருகன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில வைக்கப்பட்டிருந்தார். 1ல்டசம் பணம் கொடுத்தால் பையனை கூட்டிச் செல்லலாம் என்று அங்கிருந்தவர்கள்மருதையாவிடம் தெரிவித்தனர்.
எனது பையனை எதுவும் செய்து விடாதீர்கள். பணத்துடன் வருகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறிய மருதையா நேராக காவல்துறை ஆணையர்அலுவலகம் விரைந்தார்.
ஆணையர் லத்திகா சரணை சந்தித்து விவரத்தைத் தெரிவித்தார்.
கூடுதல் ஆணையர் ஜாங்கிட்டை அழைத்த ஆணையர், இதுதொடர்பாக உடனடியாகநடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
உடனே ஒரு தனிப்படையை அமைத்த ஜாங்கிட், மருதையாயைவிட்டு கடத்தல்கும்பலுடன் பேச வைத்தார். பணத்துடன் வருவதாக கூறிய மருதையாவுடன் போலீஸார் மாறு வேடத்தில் அந்த வீட்டுக்குச் சென்றனர்.மருதையாவிடம் ஒரு பெட்டியைக் கொடுத்து உள்ளே அனுப்பினர். அவர் உள்ளேசெனற பின்னர் போலஸீார் அதிரடியாக உள்ளே புகுந்து கடத்தல் கும்பலை வளைத்துப்பிடித்தனர்.
பாலமுருகன் பத்திரமாக மீட்கப்பட்டார். கடத்தல் கும்பலைச் சேர்ந்த கிரிபாபு,ஹரிபாபு, யோகராஜ், முரளி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் கிரிபாபு என்பவர் வாசவி ஜூவல்லர்ஸ் என்ற நகைக் கடையைசெளகார்பேட்டையில் நடத்தி வருகிறான்.
பாலமுருகனை கடத்தியது குறித்து கிரிபாபு கொடுத்துளள வாக்குமூலத்தில்,சிங்கப்பூரிலிருந்து வரும் பயணிகள் மூலம் எனக்கு தங்க நகைகள் வருவது வழக்கம்.(முன்பெல்லாம் குருவிகள் என்ற பெயரில் இதற்காகவே சிலர் வெளிநாடுகளுக்குப்போய் நகை, எலெக்ட்ரானிக் பொருட்களை கொண்டு வருவது உண்டு) அதேபோலபாலமுருகனிடம் மொத்தம் 350 கிராம் எடையுள்ள தங்க நகைகளை 2பொட்டலங்களாக கட்டிக் கொடுத்து அனுப்பினர்.
சென்னை வந்ததும் 190 கிராம் எடையுள்ள பொட்டலத்தை மட்டும் கொடுத்தபாலமுருகன், 160 கிராம் பொட்டலத்தைக் கொடுககவில்லை.
இதுகுறித்து கேட்டபோது, இனனாரு பயணியிடம் அப்பொட்டலத்தைக் கொடுத்துவிட்டதாகத் தெரிவித்தார். அவர் யார் என்று கேட்டபோது உண்மையை சொல்லமறுத்தார். அதனால்தான் கடத்தினோம் என்று கிரிபாபு கூறியுள்ளார்.
2வது பொட்டலம் குறித்து போலீஸார் பாலமுருகனிடம் கேட்டேபாது, என்னிடம் ஒருபொட்டலம் மடடுமே கொடுத்தனர். அதை நான் கொடுத்து விட்டேன் என்றார். கைதுசெயயப்பட்ட நான்கு பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில்அடைக்கப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications