தமிழக வாலிபர் ஹைதராபாத்தில் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
தமிழகத்தைச் சேர்ந்த வாலிபர் ஹைதராபாத்தில் லாட்ஜில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கெளலிகுடா பகுதியில் உள்ள லாட்ஜில் அறையெடுத்த அந்த வாலிபர் தனது பெயர் பன்னீர்செல்வம் என்றும்,சொந்த ஊர் சேலம் என்றும், தான் ராணுவத்தில் பணியாற்றுவதாகவும் ரிஜிஸ்டரில் எழுதினார்.தனது வயதை 20 என குறிப்பிட்ட அவர் ஒரு அறையில் தங்கினார். ஆனால், நாள் முழுக்க அந்த அறைதிறக்கப்படாததால் லாட்ஜ் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தந்தனர்.
போலீசார் வந்து அறையை உடைத்துப் பார்த்தபோது அந்த வாலிபர் சீலிங் பேனில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார்.
அவருக்கு அருகே தமிழில் எழுதப்பட்ட ஒரு கடிதம் இருந்தது. அதில் எனது தற்கொலைக்கு யாரும்காரணமில்லை என அவர் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications