உடைந்த தண்டவாளம்-தப்பியது குமரி எக்ஸ்பிரஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே ரயில் தண்டவாளம் உடைந்திருந்தது தக்க சமயத்தில்கண்டுபிடிக்கப்பட்டதால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் பெரும் விபத்திலிருந்துதப்பியது.
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இன்று காலை 7 மணியளவில் தாம்பரத்திலிருந்து கிளம்பிஎழும்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந் நிலையில் திரிசூலம்-மீனம்பாக்கம்இடையே உள்ள புறநகர் ரயில் பாதையில், விரிசல் இருந்ததை ரயில்வே ஊழியர்கள்சிலர் பார்த்தனர்.இதையடுத்து அந்த விரிசல், ரேடியோ அலைகளை உட்செலுத்தி ஆராயும்நவீனமுறைப்படி பரிசோதிக்கப்பட்டது. அப்போது தண்டவாளம் இரண்டாகஉடைந்திருந்தது தெரிய வந்தது.இதையடுத்து திரிசூலம் ரயில் நிலையத்திலேயே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்நிறுத்தப்பட்டது. உடைந்த தண்டவாளப்பகுதியை எடுத்து விட்டு வேறு தண்டவாளம்பொருத்தப்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்குப் பின்னர் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்ரயில் எழும்பூர் புறப்பட்டுச் சென்றது.தண்டவாளத்தில் உடைப்பு எப்படி ஏற்பட்டது, சதிவேலை காரணமா என்பது குறித்துவிசாரணை நடந்து வருகிறது.தக்க சமயத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டதால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்பெரும் விபத்திலிருந்து தப்பியது.

Click it and Unblock the Notifications
