சட்டசபையில் அமளி: அதிமுக வெளிநடப்பு
சென்னை:
அதிமுக உறுப்பினர் தா.மலரவன் பேசும்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஉறுப்பினர் குறுக்கிட்டுப் பேசியதால் அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்துவெளிநடப்புச் செய்தனர்.
சட்டசபையில் இன்று உள்ளாட்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில்கலந்து கொண்டு அதிமுக உறுப்பினர் மலரவன் பேசினார். சட்டசபையில்அவரதுமுதல்பேச்சு இது. மலரவன் பேசுகையில், திருப்பூரில் குடிநீர்த் திட்டத்தைமுந்தைய அதிமுக அரசுதான் அதிக நிதி ஒதுக்கி அமல்படுத்தியது என்றார்.அப்போது குறுக்கிட்ட திருப்பூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி,1983ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில்தான் இத்திட்டத்திற்கு அடிக்கல்நாட்டப்பட்டது. ஆனால் 1989ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான அரசுதான்கூடுதல் நிதி ஒதுக்கி திட்டததை நடைமுறைக்கு கொண்டு வந்தது என்றார்.
கோவிந்தசாமியின் பேச்சுக்கு அதிமுக கொறடா செங்கோட்டையன் கடும்ஆட்சேபனை தெரிவிததார். மலவரன் முதல் முறையாக பேசுகிறார். அவரது பேச்சில்கோவிந்தசாமி குறுக்கிடுவது முறையா? எந்தவித முன் அனுமதியும் இல்லாமல் அவர்குறுக்கிட்டுப் பேசுவதை சபாநாயகர் அனுமதிப்பது கண்டனத்துக்குரியது என்றார்.இதையடுத்து அதிமுக உறுப்பினர்களுக்கும், திமுக மற்றும் கம்யூனிஸ்ட்உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து அதிமுகஉறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்.
பின்னர் மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசுகையில், உள்ளாட்சித்துறைஅமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக மானியக் கோரிக்கை மீதானவிவாதத்திற்குப் பதில் அளித்துப் பேசுவதை கேட்க மனம் இல்லாமல் தான் அதிமுகஉறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர் என்றார்.
காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் அதிமுகஉறுப்பினர்களின் வெளிநடப்பைக் கண்டித்துப் பேசினர்.பின்னர் கோவிந்தசாமி மீண்டும் பேசுகையில், அதிமுக உறுப்பினர்கள் என்னைஅவமானப்படுத்தும் வகையில் பேசியுள்ளனர் என்றார்.
இதுகுறித்து முறைப்படி புகாராக கொடுததால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனஅதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன் பதிலளித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications