பிளஸ்டூ மாணவி சந்தித்த நூதன பிரச்சினை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையைச் சேர்ந்த பிளஸ்டூ மாணவி ஒருவர், தன்னை இ மெயில் மூலமாககாதலித்த கேரள என்ஜீனியர் தற்போது திருமணம் செய்துகொள்ள மறுப்பதாகசென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் அமெரிக்க ராணுவத்தில்பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தங்கமணி. இவர்களுடைய 17 வயது மகள்ஜெனிபர்குமாரி.

பிளஸ்டூ படித்து வரும் ஜெனிபர் குமாரி, தனது தாயார் மற்றும் வழக்கறிஞர்ஒருவருடன் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்க்கு வந்து ஒரு புகார்மனுவைக் கொடுத்தார். அதில், கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஜோசப் என்றபொறியாளரும், நானும், இன்டர்நெட் மூலம் நட்பு கொண்டு தீவிரமாக காதலித்துவருகிறோம்.

ஜோசப் தன்னைத் திருமணம் செய்ய பெண் தேவை என்று விளம்பரம்கொடுத்திருந்தார். அதை இணைய தளத்தில் பார்த்த நான் விளையாட்டாக தொடர்புகொண்டேன். இருவரும் இதன் மூலம் நட்பானோம்.

பின்னர் இருவரும் அடிக்கடி இமெயில் மூலமாகவும், சாட்டிங் மூலமாகவும் எங்களதுநட்பை வளர்த்துக் கொண்டோம். இது பின்னர் காதலாக மாறியது.

எனது புகைப்படத்தை அவருக்கு அனுப்பி வைத்தேன். அவரும் தனதுபுகைப்படத்தை எனக்கு அனுப்பி வைத்தார். இருவரது காதலும் தீவிரமானது.என்னைத் திருமணம் செய்துகொள்வதாக அவர் வாக்குறுதி அளிததார். மேலும்அவரது பெற்றோர்களும், சென்னை வந்து எனது பெற்றோரை சந்தித்துப் பேசினர்.

ஆகஸ்ட் மாதம் நிச்சயம் செய்து கொள்ளலாம் என்று ஜோசப் தெரிவித்திருந்தார்.ஆனால் எனக்கு 17 வயதுதான் ஆவதால், திருமணத்தை 18வயதுமுடிந்த பிறகுவைத்துக்கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார். நானும் இதற்கு சரி என்றுகூறியிருந்தேன்.

இந்த நிலையில் தனது அண்ணியின் தங்கையை எனது பெற்றோர் பேசி முடித்துவிட்டதாகவும், இதனால் உன்னை கல்யாணம் செய்துகொள்ள முடியாது என்றும்ஜோசப் எனக்கு மெயில் மூலம் தெரிவித்தார். இதனால் நான் அதிர்ச்சிஅடைந்துள்ளேன்.

நாங்கள்இருவரும் கல்யாணம் செய்துகொள்ளாமலேயே கணவன், மனைவியாகவாழ்ந்து விட்டோம். எனது நிர்வாணப் படங்களை அவருக்கு அனுப்பிவைத்துள்ளேன். அதேபோல அவரும் தனது நிர்வாணப் படங்களை எனக்கு அனுப்பிவைத்தார்.

மெயில் மூலமாக முத்தங்களை பரிமாறிக் கொண்டோம். உடலால் மட்டும் தான் உறவுகொள்ளவில்லையே தவிர கணவன், மனைவிக்கு இடையே என்னவெல்லாம்நடக்குமோ அதை இமெயில் மூலமும், சாட்டிங் மூலமும் நாங்கள்மேற்கொண்டுவிட்டோம், உணர்ந்து விட்டோம்.

எனவே அவரைப்போல என்னால் அவரை தூக்கி எறிய முடியவில்லை. கணவன்,மனைவிக்கு இடையே மட்டுமே இருக்க வேண்டிய அந்தரங்கம் எங்களுக்குள் நடந்துவிட்டது. எனவே இந்த நிலையில் என்னை வேண்டாம் என்று அவர் சொல்வதுஏமாற்று வேலையாக கருதிகிறேன்.

எனவே எனக்கு 18 வயது ஆனவுடன், என்னையே ஜோசப்திருமணம் செய்து கொள்ளசட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு காவல்துறை உதவவேண்டும்என்றுகூறியிருந்தார் ஜெனிபர்.

இந்தப் புகாரைப் பார்த்த அதிகாரிகள் குழம்பினர். உனக்கு 17 வயதுதான் ஆகிறது.இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளமுடியாது. மேலும் உன்னை வேண்டாம்என்று சொல்லும் நபரை ஏன் பிடிவாதமாக மணக்க நினைக்கிறாய் என்றுஅதிகாரிகள்ஜெனிபருக்கு அறிவுரை கூறிப் பார்த்தனர்.

ஆனால் இதை ஜெனிபர் ஏற்கவில்லை. மேலும் அவரது தாயாரும் ஒரு புகாரைபோலீஸாரிடம் கொடுத்தர். எனது மகளை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் ஜோசப்.எனது மகளின் பிறந்த மேனிப் படங்கள் அவரிடம் உள்ளன. இதனால் ஜெனிபர்தற்கொலைக்கு முயன்றுள்ளார். அழுதபடிஇருக்கிறார். பள்ளிக்கூடம் போகமறுக்கிறார்.

எனவேஜோசப் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுஅந்தப் புகாரில் தங்கமணிகூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்த மயிலாப்பூர் உதவிஆணையருக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+