இலவச தரிசு நிலம் நிச்சயம்: கருணாநிதி
சென்னை:
தடைகளைத் தாண்டி ஏழைகளுக்கு 2 ஏக்கர்தரிசு நிலத்தை வழங்கும் திட்டத்தை திமுகஅரசு நிறைவேற்றியே தீரும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று மார்க்சிஸ்ட் உறுப்பினர் கோவிந்தசாமி பேசுகையில்,ஏழைகளுக்கு 2 ஏக்கர் இலவச தரிசு நிலம் வழங்குவதை எதிர்க்கட்சியினர் விமர்சித்துவருவதாகவும், இத்திட்டம் எபபடி நிறைவேற்றப்படப் போகிறது என்பதை தெளிவாகவிவரிக்குமாறும் கோரினார்.அதற்குப் பதிலளித்த கருணாநிதி, 3 வழிகளில் இத்திட்டத்தை நிறைவேற்றதிட்டமிட்டுள்ளோம். முதலில் அரசிடம் உள்ள தரிசு நிலங்கள் பிரிக்கப்பட்டு நிலமற்றஏழை விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் வீதம் வழங்கப்படும்.2வது, அரசு புறம் போக்கு நிலத்தை ஆக்கிரமித்து குடியேறியுள்ளவர்களிடமிருந்துஅந்த நிலம் பெறப்பட்டு பயிரிடத்தக்க வகையில் மாற்றப்பட்டு அவர்களிடமேதிருப்பித் தரப்படும்.
இறுதியாக, தனி நபர்கள் வைத்துள்ள பட்டா நிலங்கள், அதாவது பயிரிட முடியாதநிலையில் உள்ள பட்டாவுடன் கூடிய தரிசு நிலங்கள் மேம்படுத்தப்பட்டு அவர்களிடம்ஒப்படைக்கப்படும்.
இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் விவசாய உற்பத்தியை பெருக்க முடியும்.ஏழை விவசாயிகளின் பொருளாதாரம் உயரும். வேலையில்லாத் திண்டாட்டம்சற்றுகுறையும்.
அரசின் உயரிய எண்ணத்தைப் புரிந்து கொள்ளாமல், தமிழகத்தில் 50 லட்சம் ஏக்கர்தரிசு நிலம் இருக்கிறதா, 60லட்சம் ஏக்கர் நிலம் இருக்கிறதா என்று கேட்பதுதேவையற்ற ஒன்றாகும். ஏழைகள் பயன் பெற நிலம் வழங்க வேண்டும் என்பதுஅரசின் எண்ணம்.
அதை நிறைவேற்றும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம். நிச்சயம் நிறை வேற்றியேதீருவோம். இந்தத் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாககூறிக்கொண்டிருக்கம் அதிமுகவினர், அதற்குப் பதிலாக எப்படி இத்திட்டத்தைசெயல்படுத்தலாம் என்று அரசுக்கு யோசனை தெரிவிக்கலாம்.
ஏழை மக்களுக்கு நிலம் வழங்கியே தீருவோம். யார்தடுத்தாலும அஞ்ச மாட்டோம்என்றார் கருணாநிதி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications