இலங்கை விமான தாக்குதலில் 50 தமிழர்கள் பலி!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

திரிகோணமலை பகுதியில் இலங்கை விமானப் படை நடத்திய வெறித் தாக்குதலில்50 அப்பாவித் தமிழர்கள் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மாவிலாறு அணையின் மதகுகளை விடுதலைப்ப புலிகள் திறந்து விட்ட பின்னரும்கூட, இலங்கை அரசு தனது போரை நிறுத்தவில்லை. தொடர்ந்து தமிழர் பகுதிகளில்தாக்குதல் நடத்தி வருகிறது.

இந் நிலையில், கதிரவெளி உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளபகுதிகளில் விமானப் படை தாக்குதல் நடத்தியது. இந்த கடும் தாக்குதலில் 50தமிழர்கள் பலியாயினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பதிலுக்கு விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள்கொல்லப்பட்டனர். 50 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.இதற்கிடையே, கந்தளாய்க்கு அருகே அல்லை என்ற இடத்தில் ராணுவத்தின் ஆயுதக்கிட்டங்கியில் நேற்று பெரும் வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் பல ராணுவ வீரர்கள் இறந்திருப்பார்கள் என கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 30கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த சப்தம் கேட்டதாக கூறப்படுகிறது.

இங்கிருந்தபடி தான் விடுதலைப்புலிகளின் பகுதிகள் மீது ராணுவம் பீரங்கித்தாக்குதலை நடத்தி வந்தது. நீண்டநேரமாக தாக்குதல் நடத்தியபடி இருந்ததால்பீரங்கிஏதாவது சூடாகி வெடித்திருக்கக்கூடும் என ராணுவம் தெரிவித்துளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+