மாமூல் சண்டை: 56 போலீஸார் கூண்டோடு மாற்றம்
சென்னை:
சென்னை ஆதம்பாக்கத்தில் லஞ்சப் பணத்தை பங்கிடுவது தொடர்பாக 3 போலீஸார்தெருவில் நின்று சண்டை போட்டதன் எதிரொலியாக அந்தக் காவல் நிலையத்தில்பணியாற்றி வந்த 5 சப் இனஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 56 போலீஸாரும் அதிரடியாகமாற்றம் செய்யப்பட்டனர்.
ஆதம்பாக்கம் காவல் நிலையத்தைச் சேர்ந்த 3 காவலர்கள், சில நாட்களுக்கு முன்பு,தெருவில் நின்று கடுமையாக சண்டை போட்டனர். ஒருவரிடமிருந்து பெற்ற பணத்தைபங்கிடுவது தொடர்பாக இந்த சண்டை நடந்தது.பொதுமக்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்க போலஸீார் போட்ட இந்த சண்டையால்சென்னை காவல் துறையின் பெயரே நாறிப் போனது. இந்தக் காவல் நிலையத்தில்அடிக்கடி இப்படி மாமூல் சண்டை, லஞ்சப் பணத்தை பங்கிடுவதில் தகராறு நடக்கும்என அப்பகுதி பொதுமக்கள் கூறினர்.
இந்த மோதல் தொடர்பாக விசாரணை நடத்த வந்த உயர் அதிகாரிகளிடம் இதைபொதுமக்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில்பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் இளங்கோவைத் தவிர மற்ற 56 போலீஸாரும்கூண்டோடு ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் சப்இன்ஸ்பெக்டர்கள் ஆவர்.
இன்ஸ்பெக்டர் மட்டுமே இருப்பதால் காவல் நிலையம் வெறிச்சோடிக்காணப்படுகிறது. புதிய காவலர்கள் யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை.அதுவரை பரங்கிமலை காவல் மாவட்டத்தின் கீழ் வரும் 15 காவல்நிலையங்களிலிருந்து தலா ஒரு காவலர் இங்கு வந்து பணியாற்ற வேண்டும் எனஉத்தரவிடப்பட்டுள்ளது.
ஆதம்பாககத்தில் பணத்தைப் பங்கிடுவதற்கு அடித்துக் கொண்ட காவலர்கள் உள்படமொத்தமாக அத்தனை பேரும் இடமாற்றம் செய்யப்பட்டதால் அப்பகுதி மக்கள்பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications