டெல்லி, மும்பைக்கு அல்கொய்தா குறி: அமெரிக்கா எச்சரிக்கை
டெல்லி:
ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 16ம் தேதிக்குள் மும்பை மற்றும் டெல்லி ஆகியநகரங்களில் பெரும் நாசச் செயல்களில் ஈடுபட அல்கொய்தா தீவிரவாதிகள்திட்டமிட்டுள்ளதாக இந்தியாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இந்த சதித் திட்டம் தொடர்பாக தங்களுக்கு இ மெயில் மூலம் தகவல் வந்துள்ளதாகஅமெரிக்கா தெரிவித்துள்ளது. இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும்விமானங்களை கடத்தி அவற்றை நடுவானில் குண்டு வைத்துத் தகர்க்கதிட்டமிட்டிருந்த மிகப் பெரிய சதியை இங்கிலாந்து போலீஸாரும்,உளவுத்துறையினரும் நேற்று கண்டுபிடித்து முறியடித்தனர்.இதைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டது. அதிகபட்ச உஷார் நிலையும் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், இந்தியாவில் குறிப்பாக மும்பை மற்றும் டெல்லி நகரங்களில்அல்கொய்தா உள்ளிட்ட சில தீவிரவாத அமைப்புகள் மிகப்பெரிய நாச வேலைக்குத்திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்தியாவில் வசிக்கும்அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 16ம் தேதிக்குள் இந்தியாவின் மும்பைமற்றும் டெல்லி நகரங்களில் அல்கொய்தா உள்ளிட்ட சில தீவிரவாத அமைப்புகள்மிகப்பெரும் நாச வேலைக்கு திட்டமிட்டுள்ளன.
முக்கிய விமான நிலையங்கள், இந்திய அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள்,மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள்அதிகம் கூடும் இடங்களில்இந்த தாக்குதல்கள் நடைபெறலாம்.இந்தியாவில் வசிககும் அமெரிக்கர்கள், அமெரிக்க தூதரகங்கள், அமெரிக்காதொடர்பான அலுவலகங்களும் தீவிரவாதிகளின் குறிகளாக இருக்கலாம்.
எனவே இந்தியாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதிக அளவில் வெளியில் நடமாடுவதைத் தவிர்க்கவேண்டும் என்று இந்த எச்சரிக்கை செய்தியில் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்த தீவிரவாத மிரட்டல் தொடர்பாக மத்திய அரசுக்கு அமெரிக்கஅரசின் சார்பில் முறைப்படி எந்த தகவலும் வரவில்லை என்று மத்திய உள்துறைஅமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் கடந்த மும்பை ரயில்நிலையகுண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்கனேவே இந்தியாவின முக்கியநகரங்கள், முக்கிய இடங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனவே எத்தகைய நிலையையும் சமாளிக்கும் அளவுக்கு இந்திய மக்கள் தயாராகவேஉள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications