லண்டன் சதி: இந்திய விமான நிறுவன ஊழியர் சிக்கினார்; பயணிகளுக்கு புது கட்டுப்பாடுகள்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

இங்கிலாந்து விமானங்களை நடுவானில் வெடிக்கச் செய்யும் சதித் திட்டத்தைத்தீட்டியதாக கைது செய்யப்பட்டுள்ள 24 பேரில், இந்தியாவைச் சேர்ந்த ஜெட் ஏர்வேஸ்விமான நிறுவனத்தின் ஊழியரும் ஒருவர் என லண்டன் போலீஸ் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் விமானங்களைக் கடத்தி அவற்றைநடுவானில் வெடிக்கச் செய்யும் மிகப் பெரிய சதித்திட்டத்தை இங்கிலாந்துபோலீஸாரும் உளவுப் பிரிவினரும் முறியடித்துள்ளனர். இதுதொடர்பாக 24 பேரைபோலீஸார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் இங்கிலாந்து நாட்டு பிரஜைகள் என இங்கிலாந்துதெரிவித்துள்ளது. இவர்களில் ஒருவரான அமீன் ஆஸ்மின் தாரிக் என்ற 24 வயதுஇளைஞர், இந்தியாவைச் சேர்ந்த ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் ஊழியர்என்பது தெரியவந்துள்ளது.

லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தின் பாதுகாப்புப் பிரிவில்இவர் பணியாற்றிவந்தார். கிழக்கு லண்டனைச் சேர்ந்த தாரிக்கை, வால் தாம் ஸ்டோ நகரில் கார் மூலம்தப்பிய தாரிக்கை, மோப்ப நாய்களின் உதவியுடன் போலீஸார் விரட்டிச் சென்றுபிடித்துள்ளனர்.

தாரிக் குறித்த மற்ற தகவல்களை இங்கிலாந்து போலீஸார் வெளியிடவில்லை.அதேசமயம், தாரிக் தங்களது நிறுவனத்தின் ஊழியரா என்பது குறித்து ஜெட் ஏர்வேஸ்நிறுவனம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

டெல்லியில் 2 பேர் கைது:

இதற்கிடையே, டெல்லியில் லஷ்கர் இதொய்பா அமைப்பைச் சேர்ந்த 2தீவிரவாதிகளைபோலீஸார் கைது செய்துள்ளனர்.

அப்ரார் அகமது, அபு அனாஸ் என்ற அந்த இரு தீவிரவாதிகளும் கடந்த மாதம்காஷ்மீருக்கு சென்றுள்ளனர். அதற்கு முன்பாக சில வெடிபொருட்களையும்சேகரித்துக் கொண்டு வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவர்களுடைய கூட்டாளிகளான மேலும் 2 தீவிரவாதிகள் போலீஸ் பிடியில்சிக்கவில்லை. அவர்களையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் 2 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்கள்மற்றும் 5 டெட்டனோட்டர்களை போலீஸார் பறிமுதல்செய்துள்ளனர். டெல்லியில்தங்களுக்குத் தொடர்புடைய இருவர் இருப்பதாகவும் சுதந்திர தின விழாகொண்டாட்டங்களை சீர்குலைக்கும் திட்டம் தங்களிடம்இருந்ததாகவும்கைதானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து டெல்லி முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.தீவிரவாதிகளின் தொலை பேசிப் பேச்சுக்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகின்றன. தலைமறைவாக உள்ள அந்த 2 தீவிரவாதிகளையும் பிடிக்க போலீஸார்தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாதுகாப்பு அதிகரிப்பு: அமெரிக்காவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து நாடுமுழுவதும் விமான நிலையங்கள், ரயில் நியைங்கள், முக்கிய இடங்களில் பாதுகாப்புபன் மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையததில் மிகக்கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பார்வையாளர்கள் விமான நிலையத்திற்கு உள்ளே செல்வதற்கு ஏற்கனவே தடைஅமலில் உள்ளது. தற்போது மேலும் சில பாதுகாப்பு நடவடிக்கைகள்எடுக்கப்பட்டுள்ளன.

விமான நிலையத்திற்கு எதிரே உள்ள திரிசூலம் மலையில் பாதுகாப்புப் படையினர்பைனாகுலர்களுடன் நிறுத்தப்பட்டுள்ளனர். அங்கிருந்தபடி விமான நிலையத்தையும்,அதைச்சுற்றியுள்ள பகுதிகளையும் அவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இதுதவிர திரிசூலம் மற்றும் அருகே உள்ள மலைப் பகுதிகளில் அவ்வப்போதுரோந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிலையத்தின் உட்பகுதிகளைமத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரும், வெளிப்புறங்களை சென்னை மாநகரபோலீஸாரும் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

வெடிகுண்டுகளைக் கண்டறிந்து செயலிழக்க வைக்கும் நிபுணர் படை விமானநிலையத்திலேயே நிரந்தரமாக முகாமிட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்:

இந்த நிலையில் பயணிகளுக்கு மிகக்கடுமையான கட்டுப்பாடுகள்விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான உத்தரவை மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.

இனிமேலம் விமான பயணம் மேற்கொள்ளும் ஒரு பயணி ஒரு பையை மட்டுமேஉடன் எடுத்துச் செல்லலாம்.

திரவப் பொருட்கள், ஜெல் போன்றவற்றை எடுத்துச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், விமான நிலையத்திற்கு உள்ளே இருக்கும் வரிஇல்லா கடைகளில் வாங்கப்படும் திரவ உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லதடை இல்லை.

சர்வதேச பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களது பயண நேரத்திற்கு 3 மணிநேரத்திற்கு முன்பாகவே விமான நிலையத்திற்கு வந்துவிட வேண்டும். உள்ளூர்பயணிகள் பயண நேரத்திற்கு 90 நிமிடங்களுக்கு முன்பு வந்துவிட வேண்டும்.

குழந்தைகளுக்கான உணவுப் பாருட்களை எடுத்துச் செல்ல தடை இல்லை.இருப்பினும் தேவைப்பட்டால் அவற்றையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.அந்தஉணவுப் பொருட்களை குழந்தைகளின் தாயார்களை உண்ணுமாறு அதிகாரிகள்கேட்டுக் கொள்வார்கள்.

விமான பயணங்களின் போது, மொபைல் போன்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்கள்உள்ளிட்டவை இங்கிலாந்தில் தடை செய்யபபட்டுள்ளன. இந்தியாவில் உள்நாட்டுவிமான பயணங்களில் மட்டும் இவை அனுமதிக்கப்படும். ஆனால் இவற்றையும்சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+