முக்கியத் தலைவர்களுக்கு அல் கொய்தா குறி; சுதந்திர தின கொண்டாட்டத்தை குலைக்க சதி!
டெல்லி:
இந்தியாவில் உள்ள முக்கியத் தலைவர்களை தீர்த்துக்கட்ட அல் கொய்தா மற்றும்அதன் ஆதரவு தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளதால் நாடு முழுவதும் உள்ளமுக்கியத் தலைவர்களுக்கு பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி நாட்டின் முக்கிய பகுதிகள், முக்கியத் தலைவர்களைதீர்த்துக்கட்ட அல்கொய்தா அமைப்பு திட்டம் தீட்டியுள்ளதாக புலனாய்வுத் துறைக்குத்தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக டெல்லியில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமர்மன்மோகன் சிங் கலந்து கொள்ளும் சுதந்திர தின நிகழ்ச்சிக்கு வரலாறு காணாதஅளவுக்கு பாதுகாகப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்தில் விமான எதிர்ப்பு பீரங்கிகள்நிறுத்தப்படவுள்ளன. பிரதமர் உரை நிகழ்த்தவுள்ள செங்கோட்டை பகுதியில் பலஅடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாட செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்குஅங்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வான் வழி கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையின் மேல்தளத்தில் அதிரடிப்படை கமாண்டோக்கள் குவிக்கப்படுகிறார்கள். டெல்லியின்எல்லைப்பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீவிர வாகனசோதனை நடந்து வருகிறது.
பிரதமருக்கு மட்டும் 500 கமாண்டோக்கள் பாதுகாப்பு கொடுக்கவுள்ளனர். இதுதவிரதலை நகரில் உள்ள முக்கியத் தலைவர்களுககும் பாதுகாப்பு பன்மடங்குஅதிகரிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின நிகழ்ச்சிக்கு வரும் முக்கியப் பிரமுகர்கள்பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ளனர்.
இதேபோல அனைத்து மாநிலங்களிலும் உள்ள முக்கியத் தலைவர்களுக்கு அதிகபட்சபாதுகாப்பை வழங்குமாறு மாநநி அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம்கேட்டுக்கொண்டுள்ளது.
பூகம்ப நிதியில் சதித்திட்டம்:
இதற்கிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் கடந்த ஆண்டுஏற்பட்ட பயங்கர பூகம்பத்தையடுத்து பல்வேறு உலக நாடுகள் பாகிஸ்தானுக்குநிதியுதவி செய்தன. அந்தப் பணத்தின் பெரும்பகுதி, லஷ்கர் இதொய்பா அமைப்புக்குசென்றுள்ளதாக தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து விமானங்களைக் கடத்தி அவற்றை நடு வானில் வெடிக்கச் செய்யும் சதித்திட்டத்தை அந்நாட்டு போலீஸார் கண்டறிந்து 24 பேரை உடனடியாக கைதுசெய்தனர்.கைது செய்யப்பதட்டவர்களிடம் நடத்திய விசாரமையில் பல திடுக்கிடும் தகவல்கள்வெளியாகியுள்ளன.
பாகிஸதானைச் சேர்ந்த ரஷீத் ராப், தயீப் ராப் (இருவரும் இப்போது பிரிட்டிஷ்குடியுரிமை பெற்றவர்கள்) ஆகிய இரு சகோதரர்கள் தான் இந்த சதித் திட்டத்தைதீட்டியவர்கள்என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்களில் ரஷீத்பாகிஸ்தானில் வைத்து அந்நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டான்.
கராச்சியில் உள்ள தனது நண்பரிடம் ரஷீத் போனில் பேசியுள்ளான். அப்போதுதிட்டமிட்டபடி, திரவ வெடி பொருட்களுடன் விமானத்தைக் கடத்தி வெடிக்கச்செய்யுமாறு அவன் கூறியுள்ளான்.
இந்தத் தகவலை பாகிஸ்தான் உளவுப் பிரிவினர் ஒட்டுக்கேட்டு உடனடியாகஇங்கிலாந்து போலீஸாரை உஷார் படுத்தினர். இதைத் தொடர்ந்தே சதித் திடடம்அம்பலமாகி சதிக்கு கும்பல் ஒடடு மொத்தமாக பிடிபட்டது. முதலில் பாகிஸ்தானில்17 பேர் கொண்ட கும்பல் பிடிபட்டது. இதையடுத்து இங்கிலாந்தில் 24பேர் கொண்டகும்பல் சிக்கியது.
இந்த கும்பலிடம் இங்கிலாந்து போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும்தகவல் ஒன்று வெளியானது. அதாவது கடந்த ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளகாஷ்மீர் பகுதியில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து அமெரிக்கா,இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவிகளைஅளித்தன.
இப்படிக் கிடைத்த நிதியுதவியிலிருந்து பெருமளவிலான தொகை, லஷ்கர் இதொய்பா உள்ளிட்ட சில தீவிரவாத அமைப்புகளுக்கு கைமாறியுள்ளதாக பிடிபட்டதீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பணத்தை இங்கிலாந்தில் உள்ள இஸ்லாமியஅறக்கட்டளை ஒன்று, பூகம்ப நிவாரண நிதி என்ற பெயரில் தீவிரவாதிகளுக்கு,அனுப்பி வைத்துள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இதற்கிடையே, இங்கிலாந்தில் பிடிபட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர் அஸ்மின்தாரிக்கை பணியிலிருந்து நீக்கி ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications