கருணாநிதிக்கு 6 அடுக்கு பாதுகாப்பு
சென்னை:
முதல்வர் கருணாநிதிக்கு கமாண்டோ படையோடு 6 அடுக்கு பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
காவலர் தேர்வு முடிவுகளை சுதந்திர தினத்திற்குள் வெளியிடாவிடடால்கருணாநிதியை மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப் போவதாக சிலநாட்களுக்கு முன் மிரட்டல் கடிதம் வந்தது. இந்தக் கடிதத்தை அனுப்பியது யார்என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந் நிலையில் கருணாநிதிக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கருணாநிதிக்கு கமாண்டோ படை பாதுகாப்புஅளிக்கப்பட்டு வருகிறது. ஏ.கே. 47 ரக துப்பாக்கியுடன் கமாண்டோ படையினர்பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இப்போது மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து கருணாநிதிக்கு 6 அடுக்கு பாதுகாப்புஅளிக்கப்பட்டுள்ளது.
முதல் அடுக்கில் பாதுகாப்பு போலீஸார், 2வது அடுக்கில் தனிப்பிரிவு சிஐடிபோலீஸார், 3வது அடுக்கில் கியூ பிரிவு போலீஸார், 4வது அடுக்கில் உளவுப் பிரிவுபோலீஸார், 5வது அடுக்கில் அதிரடிப்படை போலீஸார், 6வது அடுக்கில் சென்னைமாநகர போலீஸார் பாதுகாப்பு கொடுக்கிறார்கள்.
கருணாநிதியின் வீட்டிலிருந்து கோட்டை வரை செல்லும் பாதையிலும் அதி விரைவுபோலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கருணாநிதி செல்லும் பாதையில், முக்கிய சந்திப்புகளில் முன் கூட்டியேஇணை ஆணையர், துணை ஆணையர் ஆகியோர் சென்று கண்காணிப்புமேற்கொள்கின்றனர்.
ஆணையர்அலுவலகத்திலிருந்தபடியே ரகசிய கேமராக்கள் மூலம் கண்காணித்து உரியஉத்தரவுகளைப் பிறப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடற்கரைச் சாலையில் உள்ளகுடிசைப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்புமேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக அன்னை சத்யா நகரில் உள்ள குடிசைவீடுகளில் வீடு வீடாக சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications