அல் உம்மா கைதிகள்- ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் கடும் மோதல்!
கடலூர்:
கடலூர் மத்திய சிறையில் அல் உம்மா கைதிகளுக்கும், தலித் தலைவர் ஜான்பாண்டியன் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் நடந்தது. இதில் 2வார்டன்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
கடலூர் மத்திய சிறையில் அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த பலர்அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல, கொலை வழக்கில் ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்ட தலித் தலைவர் ஜான் பாண்டியனும் இங்கு தான்அடைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.சிறைக்குள் வழிபாடு செய்வது தொடர்பாக அல் உம்மா கைதிகளுக்கும், ஜான்பாண்டியனின் ஆதரவாளர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாககூறப்படுகிறது. அல் உம்மா கைதியினர் பிரார்த்தனை செய்வது குறித்து ஜான்பாண்டியன் ஆதரவாளர்கள் கிண்டலடித்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது.இருதரப்பினரும் கடுமையாக சண்டையிட்டனர். சனிக்கிழமை இரவு இந்த சண்டைநடந்துள்ளது.
சண்டையை விலக்கப் போன 2 வார்டன்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.சமீபத்தில் தான் ஜான் பாண்டியனும், அவரது ஆதரவாளர்களும், சில கைதிகளுடன்கடுமையாக மோதினர். இதைத் தொடர்ந்து தான் ஜான் பாண்டியன் திருச்சிக்குமாற்றப்பட்டார்.
இந்த நிலையில் இப்போது ஜான் பாண்டியனின் ஆதரவாளர்கள், அல் உம்மாகைதிகளுடன் மோதியுள்ளனர். இந்த மோதலைத் தொடர்ந்து அல் உம்மா கைதிஅப்பாஸ், ஜான் பாண்டியனின் ஆதரவாளர்களான பழனி, முனியாண்டி, ரவி,முத்துக்கிருஷ்ணன் ஆகியோரை வேறு சிறைகளுக்கு மாற்ற சிறைக் கண்காணிப்பாளர்நாராயணமூர்த்தி சிறைத்துறை ஐஜிக்கு பரிந்துரைத்துள்ளார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications