சுதந்திர தினம்-நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புகல்பாக்கத்தில் முப்படைகள் கண்காணிப்பு-ஊரடங்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நாளை இந்திய சுதந்திர தினத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் கல்பாக்கம் அணு மின் நிலையத்தை தாக்கலாம் எனஅமெரிக்கா எச்சரித்துள்ளதால் மின் நிலையத்துக்கு முப்படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அணு மின்நிலையத்தின் பாதுகாப்பு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமிட்டபடிஉள்ளன. இரு கடற்படை கப்பல்களும் அணு மின் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் கல்பாக்கத்தில் ஊரடங்கு உத்தரவும் அமலாக்கப்படவுள்ளது.

நாடு முழுவதும் நாளை சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது. இதுவரை இல்லாதஅளவுக்கு இந்த முறை தீவிரவாதிகள் பெருமளவில் தாக்குதல் நடத்தத்திட்டமிட்டுள்ளது உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. அமெரிக்காவும் இதுதொடர்பாக இந்தியாவை பலமாக எச்சரித்துள்ளது.

தற்கொலைப் படைகள் மூலம் தாக்குதல்களை நடத்தவும், பல மாநிலங்களில் ஒரேநேரத்தில் தாக்குதல் நடத்தவும் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.இதையடுத்து வரலாறு காணாத பாதுகாப்பு வளையத்தின் கீழ் நாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தியாவின் முக்கிய இடங்களில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மும்பையில் உள்ள பாபா அணுமின் நிலையம், கல்பாககம் அணு மின் நிலையம்,டெல்லியின் கூட்ட நெரிசல் மிக்க வணிகப் பகுதியான சாந்தினி செளக், சாந்திவனம்,செங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல்நடைபெறக்கூடும் என தகவல் கிடைத்துள்ளதால் இங்கு அதிகபட்ச பாதுகாப்புக்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கல்பாக்கம் தவிர சென்னை, மேட்டூர், கோவை, மதுரை ஆகிய நகரங்களிலும் தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கல்பாக்கத்தில் போர் கப்பல், ஹெலிகாப்டர்கள்:

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு மின் நிலையத்தை தாக்க தற்கொலைப் படை தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகஉளவுத்துறை எச்சரித்துள்ளதால் அணு மின் நிலையம் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சக்கட்ட பாதுகாப்புவளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு ராணுவத்திடம் ஒப்படக்கப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் ராணுவ மற்றும்தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களும்தமிழக போலீசாரும் 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அணுமின் நிலையம் தவிர அதன் சுற்றுப் பகுதிகளையும் ராணுவம் தங்கள் கட்டுபாட்டில் வைத்துள்ளது. விமானப்படை ஹெலிகாப்டர்களும் கடலோரக் காவல் படையின் டோர்னியர் ரக விமானங்களும் கண்காணிப்புப் பணியில்ஈடுபட்டுள்ளன. போர்க் கப்பல்களும் தயார் நிலையில் உள்ளன.

கிராமங்களில் கண்காணிப்பு:

6 மாவட்டங்களில் இருந்து சுமார் 2,500 போலீசார் கல்பாக்கம் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்கள் கல்பாக்கம்அணுமின் நிலையத்தை சுற்றி 15 கிமீ சுற்றளவில் உள்ள கிராமங்களிலும் கண்காணிப்புப் பணியில்ஈடுபட்டுள்ளனர்.

கிராமப் பகுதிகளுக்கு யாராவது புதியவர்கள் வந்துள்ளார்களா என்றும் உளவுப் பிரிவினர் வீடு, வீடாகசோதனைக நடத்தி வருகின்றனர்.

கல்பாக்கத்துக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் முழுமையாக பரிசோதனை செய்யப்படுகின்றன.

அதே போல கடற்படையும், விமானப் படையும் கல்பாக்கம் அணு மின் நிலைய பாதுகாப்பு பணியில்முதன்முதலாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. விமானப் படை ஹெலிகாப்டர்கள் வானிலிருந்து கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றன.

மீன் பிடிக்க தடை:

கல்பாக்கம் மீது அத்துமீறி பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போலகல்பாக்கத்தை ஒட்டிய கடல் பகுதியில் 2 கடற்படையின் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

கல்பாக்கம் சுற்று வட்டார பகுதி மீனவர்கள் 4 நாட்களுக்கு கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றுஉத்தரவிடப்பட்டுள்ளது. அணுமின் நிலையம் அருகே சந்தேகப்படும் வகையில் வரும் படகுகள் குண்டு வீசிஅழிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த கெடுபிடிகள் காரணமாக கல்பாக்கத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து பலர் வெளியேறி விட்டனர்.

வீடுகளை விட்டு வெளியே வர தடை:

பாதுகாப்பு காரணங்களுக்காக கல்பாக்கம் மற்றும் 8 கி.மீ சுற்று வட்டார பகுதி மக்கள் மாலை 6 மணிக்கு மேல்வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கல்பாக்கத்தில் இவ்வளவு பாதுகாப்பு இதுவரை போடப்பட்டதில்லை. எங்கு நோக்கினும் மத்திய படையினரும்போலீசாரும் வானில் ஹெலிகாப்டர்களும் போர் கப்பல்களும் ரோந்து சுற்றி வருவதால் இப் பகுதி மக்களிடையேபீதி பரவியுள்ளது.

மேலும் மின் நிலையத்தில் விமான எதிர்ப்பு பீரங்கிளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு அமலாகும்:

இதுகுறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பிரதீப் யாதவ் கூறுகையில்,

கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு பின்புறம் உள்ள கடற் பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் அளவிற்குமீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு அந்தப் பகுதி குப்பங்களில் தண்டோராமூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வான் வழிகளையும் கண்காணித்து வருகிறோம். நிலைமையை பொறுத்து இன்று மாலை 6 மணி முதல் நாளைகாலை வரை கல்பாக்கம் பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.

இந்த ஊரடங்கு உத்தரவு அணு மின் நிலையத்தை சுற்றி 8 கி.மீ. தூரத்துக்கு அமலாக்கப்படும் என போலீஸ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில்...

அதே போல நாடு முழுவதுமே உச்சபட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் சுதந்திர தின உரையாற்ற உள்ள செங்கோட்டை முழுவதிலும் மிக பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் உரை நிகழ்த்தும் போது அப்பகுதியில்விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அல்-கொய்தா அமைப்பு தவிர லஷ்கர்-ஏ-தொய்பா, ஜிஹாதி இஸ்லாமி,ஜமாத்-உல்-முஜாஹிதீன் உள்ளிட்ட பல அமைப்புகள் ஒருங்கிணைந்து நாடுமுழுவதும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுப் பிரிவுஎச்சரித்துள்ளது.

நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகமாக உள்ள ஆந்திரா, பீகார், சட்டீஸ்கர் உள்ளிட்ட13 மாநிலங்களில் அதிகபட்ச உஷார் நிலையில் பாதுகாப்பை மேற்கொள்ளுமாறுமத்திய அரசு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை எசசரித்துள்ளது.

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் அரசியல் தலைவர்கள் நடமாட்டத்திற்கும் சிலகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில்போகக்கூடாது. அப்படிப் போனால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றுகாவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தரை வழியாகவும், வான் வழியாகவும், கடல் வழியாகவும் தீவிரவாதிகள் எந்தரூபத்தில் ஊடுறுவினாலும் அவர்களின் சதியைமுறியடிக்க நாடு முழுவதும்பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+