லெபனான்-ஐநா போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது
பெய்ரூட்:
ஐ.நா. போர் நிறுத்த ஒப்பந்தம் தெற்கு லெபனானில் இன்று காலை10.30 மணிமுதல்அமலுக்கு வந்துள்ளது.
கடந்த ஒரு மாதமாக லெபனானை கடுமையாக தாக்கி வந்தது இஸ்ரேல்.இந்த போரை நிறுத்த சர்வதேச அளவில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில், போர் நிறுத்த தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒருமனதாகநிறைவேற்றப்பட்டது.
இந்தப் போர் நிறுத்தத்தை இஸ்ரேல், லெபனான் மற்றும் ஹிஸ்புல்லா ஆகியவைஏற்றுக் கொண்டன. இதையடுத்து இன்று காலை (இந்திய நேரப்படி) 10.30 மணிமுதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இந்த ஒப்பந்தத்தின்படி தெற்கு லெபனானில் இஸ்ரேல் தனது படையினரை வாபஸ்பெறவேண்டும். ஐ.நா. சபையின் சார்பில் 15,000 வீரர்களைக் கொண்ட சர்வதேசஅமைதிப் படை தெற்கு லெபனானுக்கு அனுப்பி வைக்கப்படும்.
போர் நிறுத்தம் அமலுக்கு வந்தைதைத் தொடர்ந்துமுக்கியமான சில இடங்களைத்தவிர மற்ற இடங்களிலிருந்து இஸ்ரேலிய படைகள் வாபஸ் பெறத் தொடங்கிவிட்டன.
ஒரு மாதமாக நீடித்த இந்தப் போரில் லெபனானில் 1000க்கும் மேற்பட்டோரும்,இஸ்ரேலில் 154 பேரும் பலியாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications