கணவருக்கு மயக்க ஊசி: 2 ஆண்டாக செக்ஸ் கொடுமைக்கு ஆளான பெண்!
சென்னை:
மருத்துவமனையில் வேலை பார்த்த பெண்ணை இரண்டு ஆண்டாக கற்பழித்தும்,அதை வீடியோவில் படமாக்கி காட்டி மிரட்டியும் செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தகும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அந்தப் பெண்ணின் கணவர் மாநகரகாவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ள்ளார்.
சென்னை அருகே மேடவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் வீரபத்திரன். இவரதுமனைவி ரீட்டா. இவர் மேடவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில்உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீரபத்ரன் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால், ரீட்டாவேலை பார்த்து வந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது ஒரு நாள்இரவு கணவருக்கு மருந்துகள் வாங்குவதற்காக ரீட்டா வெளியில் வந்தார்.
மருந்து வாங்கிக் கொண்டு திரும்பியபோது, அதே மருத்துவமனையில் வேலைபார்த்து வந்த தனமுத்து, ஞானசேகரன், பாஸ்கர் ஆகிய 3 பேரும் ரீட்டாவைவழிமறித்து அருகில் இருந்த ஒரு பாழடைந்த வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு வைத்து சுமார் 2 மணி நேரம் 3 பேரும் மாறி மாறி கற்பழித்தனர். அழுதுபுலம்பியபடி மருத்துவமனைக்கு வந்த ரீட்டா, தனது கணவரிடம் நடந்ததைக் கூறசென்றார்.
அப்போது குறுக்கிட்ட ஒரு நர்ஸ், இப்போது உனது கணவரிடம் அதிர்ச்சியானவிஷயங்களைக் கூற வேண்டாம் என தடுத்து விடடார்.
பின்னர் அந்த நர்ஸின் உதவியுடன், ரீட்டா வைத்திருந்த பையில், சில பொருட்களைபோட்டு விட்டு ரீடடாவுக்கு திருட்டுப் பட்டம் கட்டி விசாரணை என்ற பெயரில்அருகில் இருந்த அறைக்குக் கூட்டிச சென்றனர். அங்கு மீண்டும் ரீட்டாவை மூன்றுபேரும் கற்பழித்தள்ளனர். அதை வீடியோவிலும் படமாக்கினர்.
ஆபாச கோலத்திலும் அவரை படம் எடுத்துக் கொண்டனர். ஆபாச படத்தையும்,வீடியோவையும் வெளியிட்டு விடுவோம் என மிரட்டியதால் பயந்து பான ரீட்டாதனக்கு நேர்ந்த கொடுமையை கணவரிடம் கூறவில்லை.
ஆனால், ரீட்டாவுக்கு நேர்ந்த கொடுமை குறித்து இன்னொரு நர்ஸ், வீரபத்ரனிடம்தெரிவித்துள்ளார். இதைக்கேட்டதும் கொந்தளித்துள்ளார் வீரபத்ரன்.
இதை அறிந்த கற்பழித்த 3 பேரும் தங்களுக்கு வேண்டிய இன்னொரு நர்ஸ்உதவியோடு வீரபத்ரனுக்கு மயக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தியுள்ளனர்.கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு இப்படி மயக்க ஊசி போடப்பட்டதால் வீரபத்ரனுக்குமனச் சிதைவு ஏற்பட்டு குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இந்தக் கொடுமைகள் குறித்து அந்த மருத்துவனையின் டாக்டர் ஒருவருக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து ஆபாச கேசட்டை அவர்வாங்கி வைத்துக் கொண்டார்.
மேலும் ரீட்டா இந்த விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டிய அவர்தொடர்ந்து இதே மருத்துவமனையில் தான் வேலை பார்க்க வேண்டும் என்றும்உத்தரவிட்டார்.
இதனால் ரீட்டா தொடர்ந்து அதே மருத்துவமனையில வேலை பார்த்து வந்தார். இதுகற்பழிப்பு குற்றவாளிகளுக்கு வசதியாகப்போய்விட்டது. ஆபாச கேசட்டை சொல்லிமிரட்டியே அடிக்கடி ரீட்டாவை கற்பழிப்பதும்,செக்ஸ் தொல்லை கொடுப்பதுமாகஇருந்துள்ளனர்.
இந்த நிலையில் வீரபத்ரனுக்கு மன நிலை சரியாகி, உடல் நலமும் தேறினார்.இதையடுத்து ரீட்டா தனக்கு நேர்ந்த கொடுமைகளை அவரிடம் விளக்கியுள்ளார்.
இதையடுத்து பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்குச் சென்ற வீரபத்ரன் புகார்கொடுத்தார். ஆனால் இதை அறிந்த அந்தக் கும்பல் வீரபத்ரனை வீடு தேடி வந்துபுகாரை திரும்பப் பெறுமாறு மிரட்டினர். இதையும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்வீரபத்ரன்.
ஆனால், கற்பழிப்பு கும்பலிடம் காசு வாங்கிவிட்டதாலோ என்னவோ போலீஸார்இந்தப் புகாரை கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து இன்று மாநகர காவல்துறை ஆணையரை நேரில் சந்தித்து வீரபத்ரன்புகார் கொடுத்தார்.
இப் புகார் மீது உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறுபள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications