திருடப் போய் தீயில் கருகி இறந்த வாலிபர்!
சென்னை:
ஒரு வீட்டில் திருடப் போனவர் மொட்டை மாடியில் போடப்பட்டிருந்தஷாமியானாவில் ஏற்பட்ட தீயில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் விசேஷங்களுக்குஷாமியானா பந்தல் பாடும் காண்டிராக்டர்.பூந்தமல்லியை அடுத்த குமணன் சாவடி பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்ஆனந்தன். அந்த வீட்டின் மொட்டை மாடியில் ஷாமியான துணிகளையும், அதற்குரியகட்டைகளையும் போட்டு வைத்துள்ளார்.
2 நாட்களுக்கு முன்பு ஷாமியானா துணிகளில் தீப்பிடித்துக் கொண்டது. தீயணைப்புப்படையினர் விரைந்து வந்து தீயை அணைத்து விட்டுச்சென்றனர். பூந்தமல்லிபோலீஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில், தீயில் கருகிய துணிகளை அகற்றும் பணியில் ஆனந்தன்ஈடுபட்டிருந்தார். அப்போது கருகிய துணிகளுக்கு இடையே, ஒரு வாலிபரின் கருகிப்போன உடல் கிடந்தது. இதையடுத்து போலீஸாருக்கு ஆனந்தன் தகவல் கொடுத்தார்.
போலீஸார் விரைந்து வந்து அந்த பிணத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்குஅனுப்பினர். போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் பெயர்நீலகண்டன் என்றும், வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.
நீலகண்டன் மீது 2 காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.எனவே ஆனந்தன் வீட்டில் திருடச் சென்ற போது தீ விபத்தில் சிக்கி அவர்இறந்திருக்கக்கூடும் என போலீஸார் கருதுகிறார்கள்.
ஆனால் தீ விபத்து நடந்த இடத்திலேயே சில காலி மது பாட்டில்களும் கிடந்தன.எனவே நீலகண்டனுடன் மேலும் சிலர் வந்திருக்கலாம், மது குடிதது விட்டுஅவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கலாம், அதில் நீலகண்டன் கொலைசெய்யப்படடிருக்கலாம், அந்தக் கும்பலே தீயையும் வைத்து விட்டுச் சென்றிருக்கலாம்என்றும் போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
அந்தக் கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications