விமான ஆபத்து எச்சரிக்கையை குறைத்தது யு.எஸ்
வாஷிங்டன்:
இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு வரும் விமானங்களுக்கு விடுக்கப்பட்டிருந்தஎச்சரிக்கை அளவை அமெரிக்கா குறைத்துள்ளது.
கடந்த வாரம் இங்கிலாந்திலிருந்து அமெரிக்கா செல்லும் விமானங்களைக் கடத்தி நடுவானில் வெடிக்கச் செய்யும் தீவிரவாதிகளின் சதித் திட்டத்தை இங்கிலாந்துஉளவுத்துறைமுறியடித்தது. இதுதொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த சதித் திட்டம் வெளியானதைத் தொடர்ந்து விமானங்களுக்கு அதிகபட்சஎச்சரிக்கையை அமெரிக்க உள்துறை அறிவித்தது. பயணிகளுக்கு ஏகப்பட்டகட்டுப்பாடுகளையும் விதித்தது.
தற்போது விமானங்களுககான எச்சரிக்கையை இங்கிலாந்து அரசு குறைத்துள்ளது.இதையடுத்து அமெரிக்காவும் தனது எச்சரிக்கை அளவை குறைத்துள்ளது. சிவப்புஎன்ற அதிகபட்ச அளவிலிருந்து ஆரஞ்சு என்ற அளவாக அமெரிக்க உள்துறைகுறைத்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க உள்துறை அமைச்சர் மைக்கேல் செர்டாப் கூறுகையில்,
எச்சரிக்கை அளவைக் குறைத்துள்ளதால், தீவிரவாத மிரட்டல் போய் விட்டதாகஅர்த்தம் இல்லை. தொடர்ந்து நாங்கள் எச்சரிக்கையாகவே உள்ளோம்.அமெரிக்கர்களை குறி வைக்கும் சதித் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்.
இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு வரும் விமானங்கள் தொடர்ந்து அதிகபட்சஉஷார் நிலையில் கண்காணிக்கப்பட்டு வரும். தேவையான பாதுகாப்புமுன்னேற்பாடுகள் இந்த விமானங்களில தொடரும்.
உள்ளூர் மற்றும் பிற சர்வதேச விமானங்களில் பாதுகாப்பு எச்சரிக்கை ஆரஞ்சு என்றஅளவில் தொடரும். விமானங்களில் திரவப் பொருட்களை எடுத்துச் செல்வதற்குவிதிக்கப்பட்டுள்ள தடையும் தொடரும் என்றார் செர்டாப்.












Click it and Unblock the Notifications