இலங்கை: 61 சிறுமிகள் பலி-யுனிசெப், கருணாநிதி, ராமதாஸ், சிபிஐ கண்டனம்
நியூயார்க்:
இலங்கை விமானப்படை குண்டு வீச்சில், 61 சிறுமிகள் கொல்லப்பட்ட சம்பவத்திற்குஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
![]() |
முல்லைத்தீவு மாவட்டத்தில் செஞ்சோலை என்ற பள்ளியில் மாணவிகள் தங்கியிருந்தஆதரவற்றோர் இல்லத்தின் மீது இலங்கை விமானப் படை நடத்திய கொடூரத்தாக்குதலில் 61 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 150 மாணவிகள் படுகாயம்அடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் கடும் கண்டனம்தெரிவித்திருந்தார். இருதரப்பும் உடனடிாயக போரை நிறுத்தி விட்டுபேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
இந் நிலையில் யுனிசெப் அமைப்பின் செயல் இயக்குனர் ஆன் வெனிமேன்கூறுகையில், இருதரப்பும் உடனடியாக சண்டையை நிறுத்த வேண்டும். சர்வதேசமனிதநேய சட்டங்களை இரு தரப்பும் மதிக்க வேண்டும். தாக்குதலில் குழந்தைகள்பலியாகக் கூடாது. அவர்கள் வசிக்கும், படிக்கும், விளையாடும் இடங்களில் தாக்குதல்நடத்துவதை இரு தரப்பினரும் பும் தவிர்க்க வேண்டும்.
![]() |
யுனிசெப் அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துசென்று நிலைமையை ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்டவ்வர்களுக்கு ஆறுதலும்கூறினார் என்று கூறியுள்ளார்ஆன்.
ஐ.நா.பொதுச் செயலாளர் கோபி அன்னானின் சிறப்புப் பிரதிநிதியான (போரினால்பாதிக்கப்படும் குழந்தைகள் நலப் பிரிவு) ராதிகா குமாரசாமியும் செஞ்சோலைசம்பவத்தைக் கண்டித்துள்ளார்.
யுனிசெப் அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துசென்று நிலைமையை ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்டவ்வர்களுக்கு ஆறுதலும்கூறினார் என்று கூறியுள்ளார்ஆன்.
ஐ.நா.பொதுச் செயலாளர் கோபி அன்னானின் சிறப்புப் பிரதிநிதியான (போரினால்பாதிக்கப்படும் குழந்தைகள் நலப் பிரிவு) ராதிகா குமாரசாமியும் செஞ்சோலைசம்பவத்தைக் கண்டித்துள்ளார்.
![]() |
ராமதாஸ் கடும் கண்டனம்:
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முல்லைத் தீவில் அப்பாவி பள்ளி சிறுமிகள், விமானப் படைத் தாக்குதலில்பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இளம் சிறார்களை இலங்கை படையினர் ஈவுஇரக்கமின்றி கொன்று குவித்துள்ளனர்.
இலங்கையில் அப்பாவி மக்களை ராணுவம் கொன்று குவித்து வருகிறது என்பதற்குஇதுவே உதாரணமாகும். லெபனானில் க்வானா என்ற இடத்தில் இஸ்ரேலிய படைகள்குண்டு வீசி 40க்கும் மேற்பட்ட குழந்தைகளக் கொன்ற சம்பவத்திற்கும், செஞ்சோலைசம்பவத்திற்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை.
ஆனால் க்வானா வெறிச் செயலை கண்டித்த உலக நாடுகள் செஞ்சோலை சம்பவம்குறித்து எந்தத் கருத்தும் தெரிவிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அன்னான் இலங்கை அரசை கண்டித்திருப்பது ஆறுதல் தருகிறது.
இந்திய அரசும் இலங்கை அரசைக் கண்டிக்க வேண்டும். தமிழர்கள் மீதான தாக்குதலைகைவிடுமாறு இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
இ.கம்யூனிஸ்ட் கண்டனம்:இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா கூறுகையில்,
குழந்தைகளை கொல்வது எத்தகைய போர் விதிமுறைகளுக்கும் எதிரானது. இலங்கையில் முழு அளவிலான போர் மூளும் நிலையில் முக்கிய பாதிப்புஅப்பாவி பொது மக்களுக்குத்தான், அதிலும் குறிப்பாக பெண்கள், குழந்தைகளே பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
இரு தரப்பினரும் போர் நிறுத்த உடன்பாட்டை மதித்து சமரச பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும்.
இலங்கையில் சீர்குலைவு, தமிழ்நாடு மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்திய அரசு, இலங்கைநிலைமையை உன்னிப்பாக கண்காணிப்பதுடன், அப்பாவி பொது மக்களைகொல்வதற்கு இந்திய அரசு ஆதரவு அளிக்கும் என்று இலங்கை ராணுவமும் அரசும்கருத இடம் அளித்துவிடக் கூடாது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்















Click it and Unblock the Notifications