இந்திய கடற்படை உதவி கோரும் இலங்கை?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவினை சமாளிப்பதற்கு இந்திய கடற்படையின்உதவியை இலங்கை கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

இலங்கையில் போர் சூழல் மோசமடைந்து வருகிறது. யாழ் தீபகற்பத்தை சுற்றிவளைத்து விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இலங்கை ராணுவமும்மிக பயங்கர தாககுதல் நடத்தி வருகிறது.

ஆனால், விடுதலைப் புலிகள் கண்ணி வெடிகளை பல இடங்களிலும் பதித்துவைத்துள்ளதால் அவற்றால் ராணுவத்தின் முன்னேற்றம் கடுமையாகதடைபட்டுள்ளது.

கண்ணி வெடிகளை கண்டறியும் நவீன உபகரணங்களை தருமாறு இலங்கை அரசுகோரியதை இந்தியா ஏற்கவில்லை.

அதேசமயம், இலங்கையின் ஒரு கோரிக்கையை மட்டும் இந்தியா ஏற்கும் எனத்தெரிகிறது. இலங்கையின் வட பகுதியில் போரில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினருக்கும்,கடற்படையினருக்கும் ஆயுதங்களைக் கொண்டு செல்ல இயலாமல் இலங்கைகடற்படை திணறி வருகிறது.

காரணம், விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவு இப்பகுதியில் வலிமையுடன்இருப்பதால் வடககுப் பகுதிக்கு செலல முடியாமல் இலங்கை கடற்படை திணறுகிறது.

எனவே தென் பகுதியிலிருந்து வடக்கு பகுதிக்கு இலங்கை கப்பல்கள் செல்ல இந்தியகடற்படை உதவ வேண்டும் என இலங்கை, இந்தியாவுக்கு ரகசியமாக கோரிக்கைவைத்துள்ளதாகத் தெரிகிறது.

இந்தியக் கப்பல்களை புலிகள் தாக்க மாட்டார்கள் என்பதால் இந்தியக் கடற்படையின்உதவியை இலங்கை கேட்டுள்ளது.

இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டால் கொச்சி அல்லது விசாகப்பட்டணத்தில் இருந்துகடற்படைக் கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்பப்படலாம்.

இதற்கிடையே யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேகடும் சண்டை நடந்து வருவதால் அப்பாவித் தமிழர்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி ஓடத்தொடங்கியுள்ளனர். இவர்களில் பலர் காடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+