ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் உதிரி பாகன நிறுவனம்: தயாநிதி மாறன் தகவல்
சென்னை:
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் பிளஸ்க்ட்ரானிக்ஸ் நிறுவனம் ரூ. 450 கோடிமுதலீட்டில் செல்போன் தனது உதிரி பாகங்கள் தயாரிக்கும் பிரிவை இன்னும் 2மாதங்களில் தொடங்கும் என மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.
உலகின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான பிளக்ஸ்ட்ரானிக்ஸ், சென்னைஅருகே ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் உதிரி பாகங்களை தயாரிக்கும் பிரிவை நிறுவமுன்வந்தது.இதுதொடர்பாக இந் நிறுவனத்தின் ஆசிய பிரிவு தலைவரும், நிர்வாக இயக்குநருமானபீட்டர் டேன் மற்றும் இந்திய சேவைப் பிரிவுக்கான இயக்குநர் குருராஜ் ஆகியோர்அமைச்சர்தயாநிதி மாறனை இன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துஇத்திட்டம் குறித்து விவாதித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தயாநிதி மாறன் பேசுகையில், ரூ. 450 கோடி முதலீட்டில்இத்திட்டம் தொடங்கப்படுகிறது. முதலில் 2000 பேருக்கு வேலைவாய்ப்புகிடைககும். படிப்படியாக இது 5000 ஆக அதிகரிக்கும.செல் போன் சாதனங்கள், செட் டாப் பாக்ஸ், தொலைத்தொடர்பு உதிரி பாகங்கள்இங்கு தயாரிக்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் மேலும் பல மின்னணு உதிரி பாக தயாரிப்பு நிறுவனங்கள்தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.ஸ்ரீபெரும்புதூர் நிறுவன தொடக்க விழாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங்,தமிழகமுதல்வர் கருணாநிதி ஆகியோர் அழைக்கப்படுவர் என்றார்தயாநிதி மாறன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications