கிரெடிட் கார்டு பாக்கி: பெண்ணை படுக்கைக்கு அழைத்த வங்கி அதிகாரிகள்!
சென்னை:
கிரெடிட் கார்டு மூலம் கடனாகப் பெற்ற ரூ. 18,000 பணத்தைத் திருப்பித் தரவில்லைஎன்று கூறி பெண் ஒருவரை தவறான உறவுக்கு அழைத்ததாக பிரபல தனியார்வங்கியான எச்.எஸ்.பி.சி. அதிகாரி மீது போஸீலில் புகார் தரப்பட்டுள்ளது.
சென்னை மைலாப்பூரைச் சேர்ந்த உஷா. உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரிடம்ஸ்டெனோவாக வேலை பார்த்து வருகிறார்.சென்னை எஸ்பிளனேட் போலீஸ்நிலையத்தில் உஷார் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.அதில், கடந்த 2003ம் ஆண்டு எச்.எஸ்.பி.சி வங்கியில் கிரெடிட் கார்டு வாங்கினேன்.கடந்த 2005ம் ஆண்டு கார்டை திரும்பக் கொடுத்து விட்டேன். ஆனால் அதன் பின்னர்வசூல்அதிகாரி ரஞ்சித் என்பவர் என்னிடம் வந்து கிரெடிட் கார்டுக்குரிய ரூ. 18,000பணம் பாக்கி உள்ளதாக கூறினார்.
ஆனால் நான் பாக்கித் தொகை எல்லாம் கட்டிவிட்டுத் தான் கார்டை திரும்பத் தந்தேன்.இதனால் பாக்கி எதுவும் இல்லை என்று கூறினேன். ஆனாலும் அவர் விடாமல்என்னிடம் ஆபாசமாக பேசினார்.
அவருடன் வந்த அதிகாரியும் என்னை ஆபாசமாகத் திட்டினார். உன்னால் பணத்தைக்கொடுக்க முடியாவிட்டால் எனது வங்கியின் ஜெனரல் மேனேஜருடன் ஒரு நாள்உல்லாசமாக இருந்துவிட்டுப் போ என்று ரஞ்சித் மிகவும் மோசமாக பேசினார்.
சம்பந்தப்பட்ட ரஞ்சித், வசூல் பிரிவின் அகில இந்திய துணைத்தலைவர் கம்ரன்,மேலாளர் ரோத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்உஷா.
இதையடுத்து 3 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந் நிலையில்உஷாவின் புகாரில் குறிப்பிடப்படாத விஸ்வநாதன் என்பவர்இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை செஷன்ஸ் நீதிமனறத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதையடுத்து உஷாவும் அதே நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில்நான் விஸ்வநாதன் என்பவர் மீது புகாரே தரவில்லை. அப்படி இருக்கையில் அவராகவேண்டும் என்றே இந்த விவகாரத்தில் முன் ஜாமீன் கோரியுள்ளார்.
இதனால் அவரது மனுவை விசாரிக்கும்போது, என்னையும் அழைத்து விசாரிக்கவேண்டும் என்று அதில் உஷா கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications