எல்லை கடந்த காதலை சேர்த்து வைத்த கலாம்!
இந்தூர்:
குடியரசுத் தலைவர்அப்துல் கலாமின் உதவியால், பாகிஸ்தான் காதலியைகைப்பிடிக்கப் போகிறார் இந்திய வாலிபர்.
![]() |
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் சந்தீப். இவருக்கும், பாகிஸ்தானின்கராச்சி நகரைச் சேர்ந்த தேசரி என்ற பெண்ணுக்கும் இடையே இணையதளம் மூலம்நட்பு உருவானது. தேசிரி பெண் என்றே தெரியாமல்தான் முதலில் நட்பைதொடங்கினார் சந்தீப்.
சந்தீப்பின் சிந்தனைகள், அவரது அணுகுமுறை உள்ளிட்டவை தேசரிக்குப் பிடித்துப்போக அவருக்கு சந்தீப் மீது காதல் பிறந்தது. தான் பெண் என்பதை சந்தீப்பிடம்தெரிவித்தார்.
இதைக் கேட்டதும் இன்ப அதிர்ச்சி அடைந்த சந்தீப்புக்கும், தேசரி மீது காதல் பிறந்தது.பிறகென்ன இணையதளத்திலேயே கொஞ்ச காலம் விளையாடினர் எல்லை தாண்டிய இந்தகாதலர்கள்.
3 ஆண்டுகளாக இப்படி நீடித்த காதலை, கல்யாணம் என்ற பந்தத்தின் மூலம் வாழ்நாள்முழுவதும் நீடிக்க முடிவு செய்தபோது தான் பிராக்டிகல் சிக்கல்கள் எழுந்தன.
தேசரியும், சந்தீப்பும் முதல்கட்டமாக சந்திக்க முடிவு செய்தனர். ஆனால் பாகிஸ்தான்செல்ல சந்தீப்புக்கும், இந்தியா வர தேசரிக்கும் விசா கிடைக்கவில்லை.
இதையடுத்து இருவரும் நேபாளம் சென்று சந்திக்கவும் அங்கேயே திருமணம் செய்துகொள்ளவும் திட்டமிட்டனர்.நேபாள நாட்டு சட்டப்படி, வேறு நாட்டவர்கள் தொடர்ந்துஒரு மாதம் அங்கு தங்கினால் திருமணம் செய்து கொள்ளலாம்.
ஆனால் இவர்கள்போன நேரம் பார்த்து அங்கு மன்னர் ஞானேந்திராவுக்கு எதிராகபெரும் கிளர்ச்சி நடந்ததாலும் இந்தியர்களுக்கு (குறிப்பாக பிகாரிகள்) எதிராகதாக்குதல்கள் நடக்க ஆரம்பித்ததாலும் இருவரும் அவரவர் நாடுகளுக்குத் திரும்பினர்.
என்ன செய்வது என்றுயோசித்த சந்தீப்புக்கு ஒரு ஐடியா பிறந்தது. தனது நிலையைவிளக்கி குடியரசுத்தலைவர் அப்துல்கலாமுக்கு இ-மெயில் அனுப்பினார்.இவர்களது காதல் கதையை படித்த குடியரசுத் தலைவர் மனம் இரங்கினார்.இதையடுத்து தேசரி இந்தியாவுக்கு வர விசா கொடுக்குமாறு பரிந்துரைத்தார். அவரதுபரிந்துரையை ஏற்ற பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகம், தேசரிக்கு 3 மாத காலசுற்றுலா விசா வழங்கியுள்ளது.
தேசரி இந்தியா வரும்போது அவரை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார்சந்தீப். பின்னர் தேசரிக்கு நிரந்தர குடியுரிமை பெறவும் முயற்சிக்கப் போகிறாராம்.
தங்களை நேரில் சந்திக்கவும்,திருமணம் செய்துகொள்ளவும் உதவிய கலாமுக்கு நன்றிசொல்லி இருவரும் தனித்தனியாக இ-மெயில்கள் அனுப்பியுள்ளனர்.
பதிலுக்கு ஜனாதிபதியும் தனது வாழ்த்துக்களை இருவருக்கும் அனுப்பி அவர்களைமனம் நெகிழச் செய்துள்ளார்.
நாமும் வாழ்த்துவோம் (நம்ம கலாமையும் தான்).
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications