ராஜபக்ஷே கொடும்பாவி-எரித்த கொளத்தூர் மணி
ராமேஸ்வரம்:
இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் வந்த படகு நடுக் கடலில் கவிழ்ந்ததில் அதிலிருந்த5 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இலங்கையில் போர் வலுத்து வருவதால் அங்கிருந்து தமிழர்கள் பாதுகாப்பானஇடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். ராணுவத்தினர் அப்பாவித் தமிழர்களைகுறிவைத்து தாக்குவதால் யாழ்ப்பாணத்திலிருந்து கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும்மேற்பட்டோர் காடுகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.தமிழகத்திற்கும் ஏராளமான தமிழர்கள் அகதிகளாக வந்தவண்ணம் உள்ளனர்.இந்தஆண்டு இதுவரை மட்டும் 7,378 பேர் இலங்கையிலிருந்து அகதிகளாகவந்துள்ளனர்.
இந் நிலையில் மன்னாரிலிருந்து ராமேஸ்வரம் வந்த ஒரு படகு கடலில் கவிழ்ந்ததில்அதில் இருந்த 5 அகதிகள் இறந்தனர். தலைமன்னாரைச் சேர்ந்த புனிதபாலன் மற்றும்பொப்பிலம்பட்டு ஆகியோரின் குடும்பத்தினர் 11 பேர் மன்னார் வந்து அங்கிருந்துஒரு படகைப் பிடித்து ராமேஸ்வரத்திற்குப் பயணப்பட்டனர்.
காலை 10.30 மணிவாக்கில் படகு இலங்கை கடல் எல்லையை அடைந்தது.அப்போது பெரிய அலை வந்ததால் படகை ஓட்டிய மீனவர் படகின் வேகத்தைகுறைத்தார்.
அப்போது இன்னொரு பெரிய அலை வந்து படகை தலைகுப்புற கவிழ்த்தது.இதனால் படகில் இருந்த 5 பேர் கடலில் விழுந்தனர்.
இருப்பினும் படகு நுனியைப் பிடித்தபடி அனைவரும் தப்பினர். ஆனால் இன்னொருமிகப் பெய அலை வந்து மீண்டும் படகைத் தாக்கியது. இதில் 5 பேர் கடலில்அடித்துச் செல்லப்பட்டனர்.
இதைப் பார்த்த மற்றவர்கள் கூக்குரலிட்டுக் கதறினர். அடித்துச் செல்லப்பட்ட 5அகதிகளும் பரிதாபமாக இறந்தனர். மற்ற அகதிகள் உயிரைக் கையில் பிடித்தபடிஉதவி கேட்டு கதறிய வண்ணம் இருந்தனர்.
அந்த சமயம் வேறு ஒரு அகதிகள் படகு வந்தது. அதில் இருந்தவர்கள் கடலில்தவித்துக் கொண்டிருந்த படகில் இருந்தவர்களை மீட்டுக் கொண்டு நேற்று இரவுஅரிச்சமுனைக்கு வந்து சேர்ந்தனர்.
இரவு நேரமாகி விட்டதால் கடலில் மூழ்கியவர்களின்உடல்களை மீட்கும் முயற்சிமேற்கொள்ளப்படவில்லை. இந்த சம்பவம் அகதிகளிடையே பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது.
நேற்று மட்டும் 72 குடும்பங்களைச் சேர்ந்த 414பேர் இலங்கையிலிருந்து தமிழகம்வந்தனர். இவரக்ளில்122 பேர் பெண்கள். 126 பேர் ஆண்கள். விசாரணைக்குப்பின்னர் அனைவரும் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ராஜபக்ஷே கொடுபாவி எரிப்பு:
இதற்கிடையே இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் உருவ பொம்மையை எரித்தகொளத்தூர் மணி உள்பட 54 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை ராணுவம் செஞ்சோலை காப்பகத்தின் மீது நடத்திய தாக்குதலில் 61மாணவிகள் பலியானதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் உரிமை மீட்பு கூட்டமைப்புசார்பில் சேலம் பழைய பஸ் நிலையம் அருகே இலங்கை அதிபர் ராஜபக்சே உருவபொம்மையை எரிக்கும் போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடந்தது.
இந்த கூட்டமைப்பில் இடம் பெற்று உள்ள பெரியார் திராவிட கழகம், தமிழ் தேசியகட்சி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், மக்கள் உரிமை கூட்டமைப்பு,தலித் மக்கள் இயக்கும், ஆதிதிராவிட முன்னேற்ற கழகம், புரச்சிகர இளைஞர்முன்னணி, தமிழக இளைஞர் இயக்கம்,
மூணாங்கரடு மக்கள் நல சங்கம், ஆட்டோ ஓட்டுனர் சங்கம், தாய் மண்வாசகர்வட்டம், குடியுரிமை பாதுகாப்பு சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் மற்றும் சட்டகல்லூரி மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி ராஜபக்சேவின் உருவபொம்மைய தீ வைத்து எரித்தார். இதைத் தொடர்ந்து கொளத்தூர் மணி உட்பட 54பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் 3 பேர் பெண்கள் ஆவார்கள். பின்னர்கைதான 54 பேரும் நேற்றிரவே விடுதலை செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications