பிரபல பீரோ புல்லிங் கொள்ளையன் சிக்கினான்!
சென்னை:
சென்னை புறநகர்ப் பகுதிகளில் வீடுகளில் ஜன்னல் வழியாக பீரோவை நகர்த்தி,சாவகாசமாக திருடி, யார் பிடியிலும் சிக்காமல் கடந்த 5 ஆண்டுகளாக கலக்கி வந்தகொள்ளையன் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளான்.
![]() |
மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், பழவந்தாங்கள், நங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில்கடந்த ஐந்து ஆண்டுகளாக பீரோ புல்லிங் எனும் கொள்ளைச் சம்பவம் நடந்துவருகிறது.
இரவு நேரங்களில் வீடுகளில் பீரோவை ஜன்னலுக்கு அருகே நகர்த்தி பீரோவைதிறந்து அதில் உள்ள நகை, பொருட்களை கொள்ளை அடித்து வருகின்றனர்.
மொசைக் தரை போட்ட வீடுகளைத்தான் இந்த கும்பல் குறிவைக்கும் (பீரோவைநகர்த்துவது எளிது என்பதால்). பகலில் பீரோ உள்ள அறையை அடையாளம் கண்டபின்னர் இரவில் அந்த வீட்டுக்கு கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த யாராவது ஒருவர்மட்டும் வருவார்.
ஜன்னல் மூலமாக பீரோ உள்ள அறையின் தரையில், வழு வழு திரவத்தை முதலில்ஊற்றுவார்கள். பின்னர் பீராவை கயிறு மூலம் மெதுவாக இழுத்து ஜன்னலுக்கு அருகேகொண்டு வந்துவிடுவார்கள்.
அதன் பின்னர் திருட்டுச் சாவி மூலம் பீரோவைத் திறந்து அதில் உள்ள நகை,உளளிட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு சாவகாசமாக கிளம்பிப் போய்விடுவார்கள்.
பீரோ புல்லிங் என இதற்குப் பெயர் வைத்த போலீஸார் திருடர்களைப் பிடிக்க கடந்தஐந்து வருடமாக நாயாய், பேயாய் அலைந்தனர். ஆனால் ஒருவரும் சிக்கவில்லை.
கத்தியின்றி, ரத்தமின்றி நடந்து வந்த இந்த நூதனத் திருட்டில் மொத்தம் 5 பேர்ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. காரணம் போலீஸாருக்குக் கிடைத்த ஐந்துகைரேகைகள்தான்.
இந் நிலையில் சென்னை புறநகர்ப்பகுதிகள் அனைத்தும் மாநகர காவல்துறையின் கீழ்கொண்டுவரப்பட்ட பிறகு பீரோ புல்லிங் திருடர்களைப் பிடிக்க புதிய வியூகமவகுக்கப்பட்டது. அப்படியும் கூட அந்த கொள்ளையர்கள் சிக்கவில்லை.
மாறாக, முன்பை விட அதிகமாக பீரோ புல்லிங் நடந்து வந்தது. போலீஸாருக்குபெரும் சவாலாகவும்,பொதுமக்களுக்கு பெரும் பீதியையும் ஏற்படுத்திய இந்தகொள்ளைையர்கள், வீரப்பன் ரேஞ்சுக்கு புறநகர்ப் பகுதிகளில் பிரபலமடையஆரம்பித்தனர்.
இந்தக் கொள்ளைக் கும்பல் இதுவரை கிட்டத்தட்ட 1,000 பவுனுக்கு மேற்பட்டநகைகள், பல லட்சம் பணம், பொருட்களை கொள்ளையடித்திருப்பதாகக்கணக்கிடப்பட்டுள்ளது.
இந் நிலையில்தான் கொள்ளையர்களில் ஒருவன் சிக்கியுள்ளான். சமீபத்தில்உள்ளரகம், மடிப்பாக்கம் ஆகிய இடங்களில் பீரோ புல்லிங் நடந்தது. இதையடுத்துஇக்கும்பலைப் பிடிக்க தனிபபடை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீஸார் மாறு வேடத்தில் நங்கநல்லூர், பழவந்தாங்கல் உள்ளிட்டபகுதிகளில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடடிருந்தனர்.
பழவந்தாங்கல் இந்து காலனி பகுதியில் ஒரு நபர் சந்தேகத்திற்கு இடமாக திரிவதாகபோலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இடத்திற்கு போலஸீார்விரைந்தனர்.
அந்த நபரைப் பிடிக்காமல் அவன் என்ன செய்கிறான் என்பதை கண்காணித்து கையும்களவுமாக பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர். இதையடுத்து அந்த நபரை ரகசியமாககண்காணித்தனர்.
இந்து காலனி பகுதியில் நடந்து சென்ற அந்த நபர், ஒரு குறிப்பிட்ட வீட்டின்முன்நின்றான். சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டான். பின்னர் கொடி கட்டப்பயன்படுத்தும் நைலான் கயிற்றை அறுத்து சிறிய கம்பியில் கட்டினான். பிறகு வீட்டின்ஜன்னல் வலையை கத்தியால் கிழித்தான்.
அதன் பின்னர் கம்பியில் கட்டிய நைலான் கயிற்றை மீனுக்கு தூண்டில்போடுவதுபோல பீரோவை நோக்கிப் போட்டு அதை அப்படியே ஜன்னலை நோக்கிஇழுத்தான். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மாறுவேடப் பாலீஸார்அப்படியே அந்த நபரை சுற்றி வளைத்தனர்.திடீரென பலர் தன்னைச் சுற்றி வளைத்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த நபர்கத்தியால் போலீஸாரை குத்த முயன்றான் ஆனால் இன்ஸ்பெக்டர் லட்சுமி நாராயணன்அவனை முகத்தில் குத்தி கீழே வீழ்த்திவிட்டு, தைரியமாக கத்தியை பறித்தார்.
அவனை குண்டுக் கட்டாக தூக்கிய போலீசார் பழவந்தாங்கல் காவல் நிலையத்திற்குகொண்டு வந்து மிதிமிதயென மிதித்து விசாரித்தனர்.
அப்போது அவன் கொட்டிய தகவல்கள் இதுதான்: அந்த நபருடைய பெயர் ஷெட்டி.தர்மபுரி மாவட்டம் மொரப்பூரைச் சேர்ந்தவன். பல ஆண்டுகளுக்கு முன்பேசென்னைக்கு வந்து காசிமேட்டில் குடியேறினான். இவனுக்கு மனைவி, 3 மகள்கள்உள்ளனர்.
ஆட்டோ டிரைவராக பகல் நேரங்களில் சுற்றியுள்ளான். அப்போது வீடுகளைநோட்டம் பார்த்து வைத்துக் கொள்வான். இரவு நேரங்களில் பீரோ புல்லிங்கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளான். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தகொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளான்.
கடந்த 2002ம் ஆண்டு ஒரு வழக்கில் கைதாகி சென்னை சிறையில்அடைக்கப்பட்டான். அப்போதுதான் திருட்டை தொழிலாக செய்தால் எப்படிவசதியாக வாழலாம் என்பதை அங்கிருந்த சில கைதிகளிடமிருந்து தெரிந்துகொண்டானாம்.
இதையடுத்து பீரோ புல்லிங்கை முழு நேரத் தொழிலாக மாற்றிக் கொண்டு திருடிவந்துள்ளான். இவன் கொள்ளையன் என்பது இவனது குடும்பத்துக்குத் தெரியாதாம்.
எனது மனைவியிடம் இதை சொல்லி விடாதீர்கள் சார், மானம் போய் விடும் என்றுபோலீஸாரிடம் கதறி அழுது கெஞ்சினானாம் கொள்ளையன் ஷெட்டி.
கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட வீடுகளில் கை வைத்துள்ள ஷெட்டியிடம் இருந்து 40பவுன் நகைகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது இவனதுகூட்டாளிகளைப் பிடிகக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications