ரிமோட் கண்ட்ரோல் பரபரப்பு-ரயில்கள் நிறுத்தம்
திண்டிவனம்:
திண்டிவனம் ரயில் நிலையத்தில் ரிமோட் கண்ட்ரோல் கருவிகண்டுபிடிக்கப்பட்டதால், அது வெடிகுண்டுகளை இயக்கும் ரிமோட்டாக இருக்கலாம்என்ற சந்தேகத்தில் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, ரயில் நிலையம் முழுவதும்தீவிர சோதனை நடத்தப்பட்டது.
திண்டிவனம் ரயில் நிலையத்தில் புதிய சுரங்கப் பாதை கட்டப்பட்டு வருகிறது.இதற்கான பணி நடந்து கொண்டிருந்தபோது அப்பணியில் ஈடுபடடிருந்த ஒருஊழியர் அட்டைப் பெட்டி ஒன்று கிடப்பதைப் பார்த்து அது வெடிகுண்டாகஇருக்கலாம் என பீதியடைந்தார்.உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள் வெளியேறினர். போலீஸார்வரவழைக்கப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்தனர். பலத்தபாதுகாப்புடன், அந்தப் பெட்டி திறந்து பார்க்கப்பட்டது. ஆனால் அதில் குண்டுஎதுவும் இல்லை. ஆனால், ரிமோட் கண்ட்ரோல் கருவி இருந்தது.
இதனால் அங்கு பீதி ஏற்பட்டது. வெடிகுண்டுகளை இயக்கும் ரிமோட் போலதென்பட்டதால் திண்டிவனம் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும், அந்த வழியாகசெல்லும் அனைத்து ரயில்களையும் நிறுத்த உத்தரவிடப்பட்டது.
ஆனால் அந்த கருவியை வெடிகுண்டு நிபுணர்கள் சோதித்தபோது அது அது டிவிடிபிளேயரை இயக்க உதவதும் ரிமோட் என்பது தெரிய வந்தது.
டிவிடி பிளேயருக்குள் குண்டு வைத்து இயக்க சதி போடப்பட்டிருக்கலாம் எனஅஞ்சப்பட்டதால் திண்டிவனம் ரயில் நிலையம் முழுவதும் தீவிரமாக சோதனைபோடப்பட்டது.
ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை. இந்த பீதி காரணமாக சென்னையிலிருந்து வந்தகன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், சென்னை-திருவண்ணாமலை பாஸ்ட் பாசஞ்சர் ஆகியஇரு ரயில்களும் நிறுத்தப்படடு சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறபபட்டுச்சென்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications