இலங்கையை பிரிக்க கூடாது என்று உத்தரவு போட இவர்கள் யார்?: வைகோ
நெல்லை:
முதல்வர் கருணாநிதி தனது கொள்கைகளை மறந்து தடம் மாறிவிட்டார் என்று மதிமுக பொதுச் செயலாளர்வைகோ கூறியுள்ளார்.
நெல்லையில் மதிமுக தொண்டர்கள் கூட்டத்தில் வைகோ பேசுகையில்,இந்த சொந்த மண்ணில் பேச சந்தோசத்துக்கு கேட்கவா வேண்டும். 30 ஆண்டுகள் நான் அரசியல் ஆற்றியதுஇங்கு தான். திமுகவுக்காக அப்படி உழைத்தேன். மதிமுக கட்சி திட்டமிட்டு தொடங்கிய கட்சி அல்ல. காலத்தின்கட்டாயத்தால் தொண்டர்களால் தோற்றுவிக்கப்பட்டது. இதில் உரசிப் பார்க்க நினைப்பவர்கள் சிதறி போவார்கள்.
நான் திமுகவை அதிகம் நேசித்தேன். 23 முறை சிறை சென்றுள்ளேன். ஆனால் நான் அவர்களது வாரிசுக்குஎதிராகிவிடுவேன் என்று திட்டமிட்டு நீக்கி விட்டனர்.
ஒரு அமைப்பை பாதுகாக்க புரட்சியாளர்கள் சமரசம் பேசுவார்கள். அமைப்பு இருந்தால் தான் கொள்கையில்நிலைத்து நிற்க முடியும். அதுபோல நானும் வியூகம் அமைத்தேன். திராவிட கொள்கையில் உறுதியாகஇருக்கிறேன்.
ஆனால் கருணாநிதி எந்த கொள்கையிலும் உறுதியாக இல்லை. இது திராவிட இயக்கம் என்று சர்ட்டிபிகேட்கொடுக்க கருணாநிதிக்கு தகுதி இல்லை. டெல்லியில் பெரியார் மையம் இடிக்கப்பட்ட போது கருணாநிதிகலங்கவில்லை. அது குறித்து எதுவும் பேசவில்லை.
முன்பு எந்த கொள்கையிலும் துடிப்புடன் இருந்த அவர் வயதாகி விட்டதால் கொள்கையை மறந்து தடம்மாறிவிட்டார். இப்போது கலைஞர் அரசு மைனாரிட்டி அரசாக உள்ளது. மைனாரிட்டி அரடி என்று சொன்னால்கோபம் வருகிறது. எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டேன் என்றார்.
பிரதான கோரிக்கையான கூட்டணி அமைச்சரவை கோரிக்கையை நிறைவேற்ற வில்லையே. மகாபாரத்தில் போர்முடிந்தவுடன் பஞ்சபாண்டவர்கள் திருதராஷ்டிரனை பார்க்கப் போவார்கள். அப்போது அவர் பீமன் வந்துஇருக்கிறானா? அவனை கட்டி தழுவ வேண்டும் என்பார்.
அதை கண்ணன் புரிந்து கொண்டு பீமனை போக சொல்லாமல் இரும்பு சிலையை கொடுப்பார்கள். அந்தசிலையை திருதராஷ்டிரன் பொடிப் பொடியாக்கி விடுவான். பீமனை கண்ணன் காப்பாற்றியது போல, என்னைதொண்டர்கள் காப்பாற்றினார்கள்.
கருணாநிதியுடன் நெருங்கி போகாதீர்கள் என்று எச்சரித்தனர், அதனால் பிழைத்தேன். அவர்கள் கூட்டு சேர்ந்தால்கொள்கை முடிவு, நாங்கள் சேர்ந்தால் சந்தர்ப்பவாதமா?. நாங்கள் நேர்மையாக கட்சி நடத்துகிறோம். கட்சிதொடங்கி எத்தனையோ தலைவர்கள் கட்சியை கலைத்து விட்டனர்.
இத்தனை சோதனைக்கும் பிறகும் மதிமுகவை எஃகு கோட்டையாக கட்டிக்காத்து வருகிறோம். இலங்கைபிரச்சனையில் நான் அன்று என்ன சொன்னேனோ, அதுதான் இன்று, இலங்கை பிரச்சனை முடிவுக்கு வரவேண்டுமானால் தமிழ் ஈழமே இறுதி தீர்வு. இதுகுறித்து நாங்கள் தீர்மானம் போட்டோம் இன்னும் அதில்உறுதியாக இருக்கிறோம்.
1989ம் ஆண்டு நான் முதல் முதலாக நியூயார்க் நகரம் சென்று ஐநா சபையை பார்த்தேன். அப்போது அங்கு 170நாடுகளின் கொடிகள் பறந்தது. அதைப்பார்த்து தமிழனுக்கு தனி கொடி நாடு இல்லையே என்றுகவலைப்பட்டேன். தற்போதைய மத்திய அரசு இலங்கை, இந்தியா ராணுவ ஒப்பந்தம் ஏற்பட அஜெண்டாதயாரித்து கையெழுத்து போட இருந்த நிலையில் நான் அதை தடுத்தேன்.
ஆனால் அதை எதிர்த்து இன்று வரை திமுக பேசியது உண்டா? இல்லை. இந்திய ஒருப்பாட்டை நேசிப்பவன்நான். இலங்கையுடன் ஒப்பந்தம் போடக்கூடாது என்று பிரதருடன் பேசியபோது தெற்கே ஒரு காஷ்மீரைஉருவாக்கி விடாதீர்கள் என்று சொன்னேன். காரணம் தமிழர்களுக்கு என்று ஒரு வீர வரலாறு உண்டு.
நான் வன்முறையாளன் அல்ல. ஆனால் காலம் இப்படியே இருக்காது. ஒரு கருத்து இளைஞர்களிடம் உதித்துவிட்டது என்றால் அதை அடக்கிட முடியாது. இலங்கையில் தமிழர்களை அழிக்க துடிக்கிறார்கள். ஆனால் அதுநடக்காது.
மாவோயிட்கள், பிடல் காஷ்ட்ரோ போன்ற புரட்சியாளர்கள் சாதிக்காததை விடுதலைப்புலிகள் சாதிக்கிறார்கள்.வியட்நாமை ஆதரித்தோம். பாகிதானை பிரித்து வங்காளதேசம் உருவாக்கினோம். இலங்கையை பிரிக்க கூடாதுஎன்று உத்தரவு போட உங்களுக்கு என்ன அதிகாரம்?.
சிங்களர்களுடன் இருக்க வேண்டும் என்று சொல்ல இவர்கள் யார்? இப்போது அங்கு சண்டை தீவிரமாக நடந்துவருகிறது. நாங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். 21ம் தேதி சென்னையில் ஈழத்தமிழர் ஆதரவுமாநாடு நடத்துகிறோம்.
உள்ளாட்சி தேர்தலில் தோற்று விடுவோம் என்று தேர்தல் முறையை மாற்றி விட்டார்கள் திமுகவினர்.இருந்தாலும் உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் ஜெயிப்போம். அடுத்த ஆண்டு பாராளுமன்றத்துக்குசட்டமன்றத்துக்கும் சேர்ந்தே தேர்தல் வரும். எனவே அனைவரும் ஒற்றுமையாக இருங்கள் என்றார் வைகோ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications