டீசல் காலி.. நள்ளிரவில் நடு ரோட்டில் நின்ற அரசு பஸ்
மதுரை:
மதுரையிலிருந்து சோழவந்தான் சென்ற அரசு நகரப் பேருந்து டீசல் இல்லாததால் நடுவழியிலேயே நின்றது. இரவு நேரத்தில் நடுவழியில்பேருந்து நின்றதால், பயணிகள்பெரும் அவதிக்குள்ளானார்கள்.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சோழவந்தானுக்கு நகரப் பேருந்துஇயக்கப்படுகிறது. இரவு 10.30 மணிக்கு இந்தப் பேருந்து கிளம்பியது. இதுதான்சோழவந்தானுக்குச் செல்லும் கடைசிப் பேருந்தாகும். பேருந்தில் பயணிகள் கூட்டம்நிரம்பி வழிந்தது.பேருந்து, துவரிமான் அருகே பாய்ஸ் டவுன் என்ற இடத்தில் போனபோது திடீரெனநின்றது. அப்போது மணி இரவு 11. டிரைவர் இறங்கி டீசல் டேங்கை திறந்து பார்த்தார்.டேங்க் சுத்தமாக இருந்தது.
இதையடுத்து அந்த வெவரமான டிரைவர், கண்டக்டரிடம் சைகை மூலம் டீசல் இல்லைஎன்பதை சொல்லி விட்டு அப்படியே கீழே இறங்கிச் சென்றார்.
இந்த சைகை பாஷையை பயணிகளும் உணர்ந்து கொண்டனர். இதனால்கொந்தளித்தனர். டீசல் இல்லாமல் ஏன் பஸ்ஸை எடுத்தீர்கள், இப்போது நாங்கள்எப்படி ஊருக்குச் செல்வது என்று சரமாரியா கேள்வி கேட்டனர்.
அதறகு கண்ட்க்டர் சொன்ன ஒரே பதில், டீசல் தீர்ந்து விட்டது. மாற்று பஸ் வரும்.அதுவரை காத்திருக்க வேண்டியதுதான் என்றார்.
ஆனால், மாற்று பஸ் வரவே இல்லை, நேரம் தான் போய்க் கொண்டிருந்தது. இதனால்பயணிகள், குறிப்பாக பெண்கள், மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.
அப்போது வத்தலகுண்டு செல்லும் ஒரு தனியார் பேருந்து அங்கே வந்தது. ரோட்டில்இறங்கி நின்ற பயணிகளைப் பார்த்த அந்த தனியார் பேருந்து நின்றது.
இதையடுத்து நாங்கள் அந்த பேருந்தில் செல்கிறோம். எங்களது டிக்கெட்டை ரத்துசெய்து விட்டு பணத்தைக் கொடுங்கள் என்று அரசு பேருந்து கண்டக்டரிடம்பயணிகள் கேட்டனர்.
ஆனால் அதெலலாம் முடியாது. பணம வேண்டுமானால் சோழவந்தான்டிப்போவுக்குப் பாய் கேளுங்கள் என்று கண்டக்டர் இரும்புத்தனமாக பதில்கூறினார்.
இதனால் கையில் டிக்கெட் காசு மட்டுமே எடுத்து வந்திருந்த பயணிகள் பெரும்அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை மற்ற பயணிகள் டிக்கெடுக்கு நாங்கள் காசுதருகிறோம் என்று கூறி அழைத்துச் சென்றனர்.
இவ்வளவு நடந்தும் கூட டிரைவரும், கண்டக்டரும் பீடி பற்ற வைத்துக் கொண்டுஜோக் அடித்து பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர் என்பதுதான வேதனையிலும்பெரிய வேதனை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications