நட்வர்சிங் மகனுக்கும் காங். ஆப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஈராக் எண்ணை ஊழல் விவகாரத்தில் சிக்கி நட்வர்சிங்கைத் தொடர்ந்து அவரது மகன் ஜெகத்சிங்கும் காங்கிரஸ்கட்சியிலிருந்து நீக்கப்படடுள்ளார்.

ஐ.நா.வின் ஈராக் எண்ணைக்கு உணவுத் திட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த நட்வர்சிங், அவரதுமகன் ஜெகத்சிங் மற்றும் உறவினர்கள் ஆதாயம் அடைந்ததாக ஐ.நா. விசாரணைக் கமிஷனான வோல்கர் கமிட்டிஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது இந்தியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதுதொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிபாதக் தலைமையில் ஒருநபர் விசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட்டது.

அதற்கு முன்பாகவே நட்வர்சிங் வெளியுறவு அமைச்சர் பதவியிலிருந்து அகற்றப்பட்டு விட்டார். இந்த நிலையில்பாதக் கமிஷன் அறிக்கை வெளியானது.

அறிக்கை நாடாளுமன்றத்தில் வெளியாவதற்கு முன்பே பத்திரிகைகளுக்கு வெளியானதால்நட்வர்சிங்ஆத்திரமடைந்தார். பிரதமர்தான் இதற்குக் காரணம் என்று கூறி அவரை கடுமையாக விமர்சித்தார்.மேலும், மன்மோகன் சிங்மீது உரிமை மீறல் பிரச்சினையையும் கொண்டு வந்தார்.

இதையடுத்து நட்வர்சிங்கை காங்கிரஸிலிருந்து சஸ்பெண்ட் செய்து ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கைஎடுத்தது. இந்த நிலையில் நட்வரின் மகன் ஜெகத்சிங்கையும் கட்சியிலிருந்து நீக்கி விட்டது காங்கிரஸ்.

இது குறித்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பி.டி.கல்லா கூறுகையில், கட்சியின் அடிப்படை உறுபபினர்பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஜெகத்சிங் நீக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

ஜெகத்சிங்இப்போது ராஜஸ்தான மாநில எம்.எல்.ஏ.வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+