ஊழல் புகார்: பெண் நீதிபதி சஸ்பெண்ட்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி விரைவு நீதிமன்ற நீதிபதி தேவகி, ஊழல் புகார்காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.கள்ளக்குறிச்சி விரைவு நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் தேவகி. இவர் வழக்கில்குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு சாதகமாகதீர்ப்பு வழங்குவதாக சென்னை உயர்நீதிமன்ற கண்காணிப்புப் பிரிவுக்கு கள்ளக்குறிச்சிவழக்கறிஞர்கள் புகார் அனுப்பினர்.
இந்தப் புகாரை உயர்நீதிமன்ற கண்காணிப்புப் பிரிவு விசாரித்தது. விசாரணையில்தேவகி மீதான புகாருக்கு முகாந்திரம் இருப்பதாக தெரிய வந்ததால் அவரைசஸ்பெண்ட் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications