ஆதாய பதவி: மசோதாவுக்கு கலாம் ஒப்புதல்
டெல்லி:
ஆதாயம் தரும் பதவி தொடர்பான சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஒப்புதல் வழங்கினார்.
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் வாரியத் தலைவர் பதவி உள்ளிட்ட பல பொறுப்புகளைவகிக்கிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை சம்பளத்துடன் கூடிய பொறுப்புகள் என்பதால் ஆதாயம் தரும்பதவிகளாக இவை கருதப்படுகின்றன.எனவே பல எம்.பி.க்கள் மறறும் எம்.எல்.ஏக்களின் பதவி பறிபோகும் நிலை உருவானது. இதே காரணத்திற்காகத்தான் ஜெயாபச்சனின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சோனியா காந்தி தான் வகித்து வந்தஎம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்தித்தார்.
சோனியா காந்தியின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து இத்தகைய ஆதாயம் தரும் பதவிகளைவகிக்கும் எம்.பிக்களின் பதவிகளைக் காப்பாற்றுவதற்காக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்ட மசோதாவைக்கொண்டு வந்து நிறைவேற்றியது. பின்னர் இந்த மசோதா, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
ஆனால் சட்ட மசோதாவில் சில திருத்தங்களை செய்யுமாறு கூறி குடியரசுத் தலைவர் கலாம் மசோதவை திருப்பிஅனுப்பினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சட்ட மசோதாவில் எந்த திருத்தம் செய்யமுடியாதுஎன்று கூறி விட்ட மத்திய அரசு அதே மசோதாவை எந்த மாற்றம் இல்லாமல் மீண்டும் நாடாளுமன்றத்தில்கொண்டு வந்து நிறைவேற்றியது.
பின்னர் மீண்டும் மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.2வதுமுறையாக தன்னிடம் அனுப்பப்படும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தந்தே ஆக வேண்டும்என்று அரசியல் சட்டத்தில் உள்ளதால், இந்த முறை குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து விடுவார் என மத்தியஅரசு எதிர்பார்த்தது.
ஆனால் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் வைத்திருந்தார் கலாம். இதனால்சலசலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவரை சந்தித்து மசோதாவுக்குஒப்புதல் அளிக்குமாறு கேடடுக் கொண்டார்.
இந்த நிலையில், தற்போது மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் கலாம். இந்த மசோதா முன் தேதியிட்டுஅமல்படுத்தப்படும். இதனால் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உள்ளிட்ட 40 எம்.பிக்களின் பதவி தப்பியுள்ளது.இந்த சட்டம் மூலம் நாடு முழுவதும் 56 பதவிகள் ஆதாயம் தராத பதவிகள் பட்டியலிலிருந்துவிலக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications