ஈழத் தமிழர் பிரச்சனை: கருணாநிதி உருக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலங்கைத் தமிழர்களுக்கும், இங்குள்ள தமிழர்களுக்கும் உள்ள உறவு, தொப்புள்கொடி உறவு. இந்த உறவு,நமது சகோதர, சகோதரிகள் இலங்கையில்கொல்லப்படுவது நமக்கு இனிப்பான செய்தி அல்ல என்று முதல்வர் கருணாநிதிசட்டசபையில் உருக்கமாக தெரிவித்தார்.

இன்று கேள்வி நேரம் முடிந்ததும் மதிமுக தலைவர் கண்ணப்பன் கவன ஈர்ப்புதீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அப்போது பேசுகையில், முல்லைத் தீவில்61மாணவிகள் இலங்கை ராணுவத்தால் குண்டு வீசிக் கொல்லப்பட்டது குறித்து இந்தசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை திரிக்கப்பட்ட செய்திகளின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டதீர்மானம் என இலங்கை துணைத் தூதரகம் கூறியிருக்கிறது. இலங்கைக்கு பாகிஸ்தான், சீனாஆகிய நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகிறது.அமெரிக்கா தனது தூதரை இலங்கைக்கு அனுப்பி அந்த நாட்டு அதிபருடன் பேசவைத்துள்ளது.

இப்படி பல சம்பவங்கள அடுத்தடுத்து அங்கு நடந்து வருகின்றன.இதை நமது மத்தியஅரசு கூர்ந்து கவனிக்க வேண்டும். இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோதுதிரிகோணமலையில் அமெரிக்க தளம் அமைக்க எடுத்த முயற்சியை தடுத்தார்.

இப்போது மீண்டும் திரிகோணமலையில் கால் ஊன்ற அமெரிக்கா முயலுகிறது.மாணவிகள் கொல்லப்பட்டதை ஐ.நா. பொதுச் செயலாளரே கண்டித்துள்ளார். ஆனால்இந்திய அரசு மெளனமாக இருப்பது வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.

இந்திய கடற்படை இலங்கைக்கு உதவியுள்ளது. ரேடார் வசதிகளையும் நமது அரசுகொடுத்துள்ளது. ஆனால் இந்த வசதிகளை தமிழர்களை அழிப்பதற்கு இலங்கைக்குஉதவியாக அமைந்து விட்டது என்றார்.

இதற்கு கருணாநிதி பதிலளிக்கையில், ஈழத்தமிழர்பிரச்சினையை 2 விதமாகபிரிக்கலாம். ராஜீவ் காந்திக்ககு முன்பு, ராஜீவ்காந்திக்குப் பின்பு.ராஜீவ்காந்திக்கு பின் என்ற நிலைவராமலிருந்திரந்தால் ஈழத்தமிழர்களின் நிலையேஇன்று வேறாகி இருக்கும்.

1989ம் ஆண்டு நடந்த சட்டசபைத தேர்தலில் திமுக வெற்றி பெற்று நான்முதல்வராகப் பொறுப்பேற்றேன். மரியாதை நிமித்தமாக அன்றைய பிரதமர்ராஜீவ்காந்தியை சந்திக்க நான் டெல்லி சென்றேன். முரசொலி மாறனும் உடன்வந்திருந்தார்.

அப்போது ராஜீவ் காந்தி, என்னிடம், இலங்கைப் பிரச்சனையை நீங்கள் தீர்ககவேண்டும். வவுனியாவுக்கு நீங்களும், முரசொலி மாறனும், கோபால்சாமியும்(வைகோ) சென்று பிரபாகரனை பார்த்து முடிவு எடுத்து வாருங்கள் என்றார். இதறகானவிமான வசதி, போக்குவரத்து ஏற்பாடு செய்துதருவதாகவும் கூறினார்.

செந்னை சென்று தெரிவிப்பதாக கூறினேன். அப்போது ராஜீவ்காந்தி பிரபாகரனைபெரிதும் புகழ்ந்தார். சென்னை திரும்பினேன். அதற்குள் கோபால்சாமி எனக்கு ஒருகடிதம் எழுதிவைத்து விட்டு வவுனியாவுக்கு சென்றுவிட்டார். அதன் பிறகுஎன்னென்னவோ நடந்து விட்டது. ராஜீவ்காந்தி தமிழ் மண்ணில் ரத்தம் சிந்தவேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் இந்தியாவில் இருந்து எழுந்த உணர்ச்சி மாய்ந்து போயின. இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் தமிழர்கள் நமது இதயம், தொப்புள் கொடிஉணர்வு உள்ளவர்கள். சிறுவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாம் தீர்மானம்நிறைவேற்றியது சரியானதுதான்.

அந்த தீர்மானத்தை இந்த அவையில் ஏகமனதாக நிறைவேற்றியிருக்கிறோம்.தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள் என்பற்கு இது ஒரு உதாரணம்.தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தது தவறு என்றால் அந்தத் தவறை திரும்ப திரும்பசெய்துகொண்டு தான் இருப்போம்.

இலங்கை அரசின் கவனத்தை கவர தீர்மானம் கொண்டு வந்திருப்பதாக இலங்கைதூதரகம் கூறியுளளது. இத்தீரமானத்தை கொண்டு வருவதால், இறந்தவர்கள் பிழைத்துவிடமாட்டார்கள். என்றாலும் இலங்கை அரசின் கவனத்தை மட்டுமல்ல, இந்தியஅரசின் கவனத்திற்கும் கொண்டு வரவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேல் நடவடிக்கை என்ன எடுப்பது, எப்படி அணுகுவது என்பதை மத்திய அரசுபார்த்துக்கொள்ளும் என்றார்கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+