2 ஏக்கர் நில திட்டம்: செப்.17ல் திருவள்ளூரில் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசின் ஏழைகளுக்கு 2 ஏக்கர் இலவச நிலத்திட்டத்தை செப்டம்பர் 17ம் தேதிதிருவள்ளூரில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.
தமிழக சட்டசபையில், வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில்,செப்டம்பர் 17ம் தேதி பெரியார் பிறந்த நாளன்று, திருவள்ளூரில் நடைபெறும்விழாவில், 2 ஏக்கர் இலவச நிலத் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.முதல்வர் கருணாநிதி கலந்துகொண்டு ஏழைகளுக்கு இலவச நிலத்தை வழங்கும்பணியைத் தொடங்கி வைக்கிறார்.
இத்திட்டத்தை அமல்படுத்த கிராமங்கள் தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டு அந்தக்குழுக்கள் மூலம் நிலம் பெறும் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர் என்றார்அமைச்சர் பெரியசாமி.












Click it and Unblock the Notifications