தாஜ்மஹாலை தகர்க்கப் போவதாக மிரட்டல்!
Subscribe to Oneindia Tamil
ஆக்ரா:
உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக வந்த கடிதத்தை தொடர்ந்துதாஜ்மஹாலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
உ.பி.மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த காவல்துறை உயர்அதிகாரி ஜுனேஜோவுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது.இந்தியில் எழுதப்பட்டுள்ள அக்கடிதத்தில், உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்போகிறோம். இதை முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.இதையடுத்து தாஜ்மஹாலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார்குவிக்கப் பட்டுள்ளனர். ஆக்ராவிலிருந்து ராணுவ வீரர்களும் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தாஜ்மஹாலின் பல பகுதிகளில் ரகசியக் கேமராக்களும் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்புமேற்கொள்ளப்பட்டுள்ளது.
மிரட்டல் கடிதம் குறித்து தீவிர ஆய்வு நடந்து வருவதாகவும், அல்கொய்தா அமைப்பின் பெயர் இக் கடிதத்தில்கூறப்பட்டிருப்பதால் அந்த அமைப்புக்கும், இந்த மிரட்டலுககும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணைநடந்து வருவதாக உத்தரப்பிரதேச மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications