இங்கிலாந்து: திரவ வெடிகுண்டு தயாரிப்பு சாதனங்களுடன் சிக்கிய சூட்கேஸ்!
லண்டன்:
இங்கிலாந்தின் பக்கிங்காம் மாகாணத்தில் திரவ வெடிகுண்டுகளை தயாரிக்க உதவும்கருவிகள் அடங்கிய சூட்கேஸ் ஒன்றை போலீஸார் கண்டுபிடித்தனர்.
இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் விமானங்களைக் கடத்தி நடுவானில்அவற்றை வெடிக்கச் செய்ய தீவிரவாதிகள் தீட்டியிருந்த திட்டத்தை கடந்த வாரம்இங்கிலாந்து போலஸீார் முறியடித்தனர்.இந்த சதித்திட்டம் தொடர்பாக 23 பேரையும் போலீஸார் கைது செய்தனர். தற்போதுஇவர்கள் கைதுசெய்யப்பட்ட பகுதிக்கு அருகே திரவ வெடிகுண்டுகளைத் தயாரிக்கும்சாதனங்கள் அடங்கிய சூட்கேஸை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
பக்கிங்காம்ஷயர் மாகாணத்தில் உள்ள வைகோம் என்ற இடத்தில் இந்த சூட்கேஸ்கண்டுபிடிக்கப்பட்டது. இதில் திரவ ரசாயனம், திரவ வெடிகுண்டு தயாரிக்க உதவும்சாதனம், வெடிகுண்டை வெடிக்க வைக்கும் கருவி ஆகியவை உள்ளன.
இந்த சூட்கேஸை தடயவியல் நிபுணர்களிடம் ஸ்காட்லாந்து யார்டு போலீஸார்ஒப்படைத்துள்ளனர். அவர்கள் திரவ வெடிபொருள்குறித்து ஆய்வு நடத்திவருகின்றனர். கடந்த வாரம் 23 பேர் பிடிபட்டபோது அவரகள் வசம் இருந்த திரவவெடிபொருள் சிக்கவில்லை.
அதை பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து எங்காவது அவர்கள் மறைத்துவைத்திருக்கலாம் என கருதப்பட்டது. கடந்த ஆண்டு லண்டனில் நடந்த ரயில் நிலையகுண்டுவெடிப்புச் சம்பவங்களில் தீவிரவாதிகள் டிரை அசிட்டேட் டிரை பெராக்ஸைட்என்ற திரவ வெடிபொருளைத்தான் பயன்படுத்தினர்.
அதே வெடிபொருளை பயன்படுத்தித்தான் தற்போது குண்டுவெடிப்பு சதித் திட்டத்தைஅவர்கள் தீட்டியிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
திரவ நிலையில் ரசாயானத்தை விமானங்களுக்குள் எடுத்துச் சென்று, அங்குள்ளகழிப்பறைகளில் வைத்து வெடிகுண்டுகளாக மாற்றி வெடிக்கச் செய்யதிட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, தீவிரவாதிகளுக்கு பணப் பரிவர்த்தனை எந்த வழியில் நடந்ததுஎனபது குறித்து ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் தீவிர விசாரணைமேற்கொண்டுள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வங்கிகளின் கிளைகளை,கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 19 முக்கிய தீவிரவாதிகளின் பெயர்களில் கடந்தவாரம் பணம் ஏதாவது எடுக்கப்பட்டுள்ளதா அல்லது போடப்பட்டுள்ளதா என்பதுகுறித்த தகவல்களை தெரிவிக்குமாறு போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
லண்டனில் இஸ்லாமிய வங்கிகளும் பல உள்ளன. இந்த வங்கிகளிலும் போலீஸார்தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இஸ்லாமியர்கள் மட்டுமே பயன்படுததும்வங்கிகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இந்த சதித்திடடம் தொடர்பாகமுதலில் கைது செய்யப்பட்டபாகிஸதானைச் சேர்ந்த ரஷீத் ராபிடம், பாகிஸ்தான போலீஸார் தொடர்ந்து தீவிரவிசாரணை மேற்கொண்டுள்ளனர். லண்டன் சதித்திட்டத்திற்குப் பண உதவி செய்ததுயார் என்பது குறித்து ரஷீத்திடம் பாகிஸ்தான் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
ஹவாலா மூலம் தீவிரவாதிகளுக்கு பணம் அனுப்பப்பட்டிருக்கலாம எனவும்சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையே, குண்டுவெடிப்புச் சதித் திட்டம் தொடர்பாககைது செய்யப்பட்ட கைதிகளில் ஒருவர், இந்தியாவின் நீண்ட நாள் எதிரியானகாஷ்மீர் தீவிரவாதி மெளலானா மசூத் அஸாருக்கு மிகவும் நெருங்கிய உறவினர்என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு 155 பயணிகளுடன் இந்திய விமானம் ஆப்கானுக்குகடத்தப்பட்டது நினைவிருக்கலாம். அப்போது கடத்தல்காரர்கள், அஸார் உள்ளிட்ட 3முக்கிய தீவிரவாதிகளை விடுவித்தால்தான் பயணிகளை விடுவிக்க முடியும் எனநிபந்தனை விதித்தனர்.
இதை ஏற்ற அப்போதைய பாஜக கூட்டணி அரசு அஸார் உள்ளிட்ட3 பேரைவிடுதலை செய்தது. அதன்பின்னர் பாகிஸ்தானுக்கு தப்பி ஓடிவிட்ட அஸார்,அங்கிருந்தபடி ஜெய்ஷ் இ முகம்மது என்ற தீவிரவாத அமைப்பை தனது சொந்தஊரான பாகிஸ்தானின் பகவல்பூரில் தொடங்கினார்.
இந்த அமைப்புக்கும், அல்கொய்தா அமைப்புக்கும் இடையே மிக நெருங்கியதொடர்புகள் உள்ளன. அத்தோடு தாலிபான் அமைப்புடனும்நெருங்கியதொடர்புஉள்ளது.
தற்போது பல்வேறு பிரிவுகளாக இந்த அமைப்பு பிரிக்கப்பட்டு பாகிஸ்தானிலேயேபல்வேறு குண்டுவெடிப்புகளை நடத்தி வருகிறது. அமெரிக்காவுடன் சேர்ந்துபாகிஸ்தான் அரசு அல்கொய்தா தலைவர்களையும், தாலிபான் தலைவர்களையும்காட்டிக் கொடுத்து வருவதால் பாகிஸ்தானிலேயே சதி வேலைகளில் இந்த அமைப்புஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
பகவல்பூரில் அஸார், தாருல் உலூம் மதீனா என்ற மத போதனை மையத்தை நடத்திவருகிறார். அங்கு கிடட்த்தட்ட 2000 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.இப்போது அஸாருக்கும், லண்டன் சதித்திட்டத்தின் முக்கிய நபர்களில் ஒருவரானஅந்தத் தீவிரவாதிக்கும், அஸார் குடும்பத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளதுதெரிய வந்துள்ளது.
அஸாரின் அண்ணனைத் தான், லண்டனில் கைது செய்யப்பட்டவரின் மைத்துனிமணந்துள்ளார். மேலும், கைது செய்யப்பட்டவரின் தாயும், அவரது சகோதரியும்தான்தாருல் உலூம் மதீனாவின் நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார்களாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications