100வது நாளில் திமுக ஆட்சி: 67% மக்கள் திருப்தி-கருத்துக்கணிப்பு
சென்னை:
திமுக ஆட்சி தனது 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்த நூறு நாள் ஆட்சி திருப்தி அளிக்கும் வகையில்உள்ளதாக சென்னை நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
திமுக ஆட்சி அமைத்து நூறு நாட்கள் முடிந்துள்ளன. திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்ட பலவாக்குறுதிகளை குறுகிய காலத்தில் நிறைவேற்றியும், நடைமுறைப்படுத்த உத்தரவிட்டும் சாதனை படைத்துள்ளதுதிமுக அரசு.சத்துணவுடன் வாரம் இருமுறை முட்டை, 2ரூபாய்க்கு கிலோ அரிசி, திருமண நிதியுதவித் திட்டம், கருவுற்றதாய்மார்களுக்கு ரூ. 6000 உதவித்தொகை, 13,000 மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை உள்ளிட்டநிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளுடன் 100 நாட்களை கடந்துள்ளது திமுக அரசு.
வருகிற செப்டம்பர் 15ம் தேதி முதல் இலவச கலர் டிவி திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. 17ம் தேதி முதல்நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் நிலம் தொடங்கவுள்ளது. இதுதவிர பொங்கல் திருநாள்முதல்இலவச காஸ் இணைப்புடன், காஸ் ஸ்டவ் வழங்கும் திட்டம் அமலுக்கு வரவுள்ளது.
இந்தப் பின்னணியில், சென்னை சாந்தோமைச் சேர்ந்த குட்வில் கம்யூனிகேஷன் நிறுவனம் சார்பில் திமுக ஆட்சிகுறித்து பொதுமக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இந்த முடிவுகள் குறித்து அமைப்பின் நிர்வாகஇயக்குநர் ஜெகத் கஸ்பார் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகம் முழுவதும் உள்ள 70 மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில், திமுக ஆட்சி மீது 67 சதவீத மக்கள் திருப்தியும், நல்லெண்ணம் தெரிவித்துள்ளனர். 2 ரூபாய்க்குகிலோ அரிசித் திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதேசமயம், கலர் டிவி திட்டம், 2 ஏக்கர் நிலத்திட்டம் ஆகியவை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ளது. இவை சரியாக வழங்கப்படாவிட்டால் மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்படும். அதேபோல அரசு ஊழியர்களுக்கு தேவைக்கு அதிகமாக அரசு முக்கியத்துவம் தருவதாக மக்களிடையேஅதிருப்தி நிலவுகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் திமுகவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. மேற்குமாவட்டங்களில் இன்னும் அதிமுகதான் பலமாக உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, யார் நல்லாட்சிதருகிறார்களோ அவர்களையே ஆதரிப்போம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
விஜயகாந்த்துக்கு சென்னையில் பெரிய அளவில் ஆதரவு இல்லை. ஆனால் மற்ற அனைத்து மாவட்டங்களிலும்நல்ல ஆதரவு காணப்படுகிறது. கடந்த தேர்தலுக்குப் பின்னர் அவரது கட்சிக்கு 0.5 சதவீத ஆதரவுஅதிகரித்துள்ளது என்றார் கஸ்பார்.
கூறிய வாக்குறுதிகளை ஓரளவுக்கு நிறைவேற்றியுள்ள திமுக அரசு தொடர்ந்து மீதள்ள வாக்குறுதிகளையும்உறுதியுடன் நிறைவேற்றுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications