2 வயது சிறுமி மீது கொலை முயற்சி வழக்கு!
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மாரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 2 வயது சிறுமி மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருப்பது அந்த மாநிலததில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம மாவட்டம் மாரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அபர்ணா. இந்த 2வயது சிறுமியின் தாய், தந்தை,பாட்டி மீது சொத்துத் தகராறு காரணமாக ஒருவரை தாக்கியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இதில் கொடுமை என்னவென்றால் இந்த வழக்கில் அபர்ணாவையும் போலீஸார் சேர்த்துள்ளனர். கேரளாவில்பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது இந்த விவகாரம். தாக்கப்பட்டதாக கூறப்படும் நபர் கொடுத்த புகாரின்அடிப்படையில் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் உதவி சப்இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.
தனது தாய், தந்தை, பாட்டியுடன் சேர்ந்து அந்த நபரை அடிக்கப் பாய்ந்தாளாம் அபர்ணா என்று போலீஸார் பதிவுசெய்துள்ள முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.
இதுகுறித்து மாவட்ட காவல்துறை உயர் அதிகாரி கூறுகையில், இது தொடர்பாக விசாரைண நடந்து வருகிறது.முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த அதிகாரி மெத்தனமாக இருந்தது தெரிய வந்துள்ளது. அவர் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்திய குற்றவியல் சட்டத்தின் 82வது பிரிவு 7 வயதுக்கு கீழ் உளள குழந்தைகள் மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்யக்கூடாது என்று கூறுகிறது. ஆனால் கேரள காவல்துறை இதை மீறி புதிய சாதனை படைத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications