புலி ஆதரவு பேச்சு: மதிமுக மா.செ. கைது!
சென்னை:
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக பேசியதாக கூறி தென் சென்னைமாவட்ட மதிமுக செயலாளர் வேளச்சேரி மணிமாறன் அதிரடியாக கைதுசெய்யப்பட்டார்.
இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,கடந்த 17ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே விடுதலை சிறுத்தைகள்கட்சி சார்பில் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன்தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.இலங்கையில் செஞ்சோலையில் 61பள்ளிக்குழந்தைகள் படுகொலைசெயயப்பட்டதைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டுபேசிய சென்னை மாவட்ட விடுதலைச் சிறுத்தை பொருளாளர் கடம்பன் பேசுகையில்,
இலங்கைப் பிரச்சினைக்கு ஒரு முடிவு ஏற்படவில்லையென்றால், தமிழ்நாட்டைஇந்தியாவின் வரைபடத்திலிருந்து எடுக்க திருமாவளவன் தலைமையில் போராட்டம்நடத்த வேண்டியிருக்கும் என்று பேசினார்.
தென் சென்னை மாவட்ட மதிமுக செயலாளர் வேளச்சேரி மணிமாறன் பேசுகையில்,ஈழத்தமிழ் மக்கள் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக ஏ.கே.47 துப்பாக்கியைதாங்கியும் போராட தயாராக இருக்கிறோம். முடிவை நீங்கள் எடுக்கவில்லை எனறால்,தனித் தமிழ்நாடு கேட்க வேண்டிய போராட்டம் வெடிக்கும் என்றும் பேசியுள்ளார்.
இந்தப் பேச்சுக்கள் இந்தியாவின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் குந்தகம்விளைவிக்கும் பேச்சுக்கள் ஆகும். மேலும தடைசெய்யப்பட்ட அமைப்புக்குஆதரவாக பேசியாதல் இவர்கள் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து வேளச்சேரி மணிமாறன் கைது செய்யப்படடார். பின்னர் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடம்பன் தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடி வருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
வேளச்சேரி மணிமாறன் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் நுங்கம்பாக்கம்காவல் நிலையத்தின் முன்பு மதிமுகவினர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால்அங்கு சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து 9 மதிமுகவினரைபோலீஸார் கைது செய்தனர்.
வைகோ கண்டனம்:
இதற்கிடையில் மணிமாறன் கைதுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 21ம் தேதி சென்னையில் ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கு மதிமுக ஏற்பாடு செய்துள்ளது.இதை சீர்குலைக்கும்முகமாகத்தான் மணிமாறனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இருப்பினும் திட்டமிட்டபடி ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நிச்சயம் நடந்தே தீரும்என்று கூறியுள்ளார் வைகோ.
தற்போதைய ஆட்சியில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கைதுசெய்யப்பட்டுள்ள முதல் நபர் மணிமாறன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications