விடைபெற்றார் இன்போசிஸ் நாராயணமூர்த்தி!
டெல்லி:
உலகின் முன்னணி ஐ.டி. சாம்ராஜ்யங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்துநாராயணமூர்த்தி இன்றுடன் விலகுகிறார்.
இந்தியாவின் முன்னணி ஐ.டி.நிறுவனம் என்ற பெருமை மட்டுமல்லாமல், உலகின் முன்னணி ஐ.டி.நிறுவனங்களில் ஒன்றாகவும் இன்போசிஸ் நிறுவனத்தை மாற்றிய சாதனைக்குரியவர் நாராயணமூர்த்தி.இந்தியாவில் ஐ.டி.துறையில் பெரும் புரட்சிக்கு வித்திட்டவர் நாராயணமூர்த்தி.அத்தகைய பெருமைக்குரிய நாராயணமூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து இன்றுமுதல் விலகுகிறார். தனது பிறந்த நாளை இன்று கொண்டாடும் நாராயணமூர்த்தி மிகுந்த மகிழ்ச்சியுடன்இன்போசிஸ் தலைவர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார்.
தனது இன்போசிஸ் காலங்கள் குறித்து நாராயணமூர்த்தி கூறுகையில், நாங்கள் இன்போசிஸை ஆரம்பித்த போது,7 ஜோக்கர்கள் சேர்ந்து ஆரம்பிக்கும் இந்த நிறுவனத்தால் என்ன சாதித்து விட முடியும், இவர்கள் என்னதான்செய்யப் போகிறார்கள் என்று ஏளனம் செயதவர்கள் பலர் உண்டு. அவர்களை இன்று நான் நினைத்துப்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.
வெறும் 250 டாலர் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டது இன்போசிஸ். இன்று இந்திய மதிப்பில் ரூ. 93,000 கோடிசொத்து மதிப்புடைய நிறுவனமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது இன்போசிஸ். சந்தைப் பாருளாதார மதிப்பில்உலக அளவில் 4வது மிகப் பெரிய நிறுவனம் இன்போசிஸ்.
நான் மிகுந்த கடவுள் நம்பிக்கை உடையவன். என்னுடன் சேர்ந்தவர்களும் அப்படியே இருந்ததால் என்னால்எதையும் சுலபமாக சாதிக்க முடிந்தது. நான் வேறு ஏதாவது முதலீடடில் இறங்க நேரிட்டால், இதே குழுவுடன்இணைந்துதான் அதையும் செய்வேன் என்று தன்னுடன் உழைத்தவர்களை நன்றியுடன் நினைவு கூறுகிறார்நாராயணமூர்த்தி.
கடந்த 2005ம் ஆண்டில் தி எக்கனாமிஸ்ட் பத்திரிக்கை வரிசைப்படுத்திய உலக அளவில் சிறந்த 15 நிர்வாகிகளில்நாராயணமூர்த்திக்கு 8 வது இடம் கிடைத்தது. ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கை கடந்த ஆண்டுவரிசைப்படுத்திய உலகின் மிகச் சிறந்த வர்த்தக தலைவர்களில் 28வது இடம் நாராயணமூர்த்திக்குக் கிடைத்தது.
அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை உலகின் 10 சிறந்த எதிர்கால தொழில் நுட்பத் துறை மேதைகளில்நாராயணமூர்த்தியும் ஒருவராக இடம் பெற்றிருந்தார்.தலைவர் பதவியிலிருந்து விலகும் நாராயணமூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தின் அன்றாடப் பணிகளில் இனிமேல்தலையிட மாட்டார்.
அதேசமயம், நிறுவனத்தின் ஆலோசகராக செயல்படுவார். நாராயணமூர்த்தி விலகல் குறித்து இன்போசிஸ்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான நந்தன் நிலகேனி கூறுகையில், அவர்ஒருசிறந்த தலைவர். இந்திய வரலாற்றில் தனி இடம் பிடித்துள்ளவர்.
நாட்டின் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவராக அவரும் அறியப்படுவார்.நாட்டையே வழி நடத்திச் செல்லும் அளவுக்கு ஆற்றல் மிக்கவர். நியாயமான மனிதர். அதேசயம் கடுமையானமனிதரும் கூட. எதிலும் முழுமையை எதிர்பாரப்பவர் என்று புகழ்ந்துள்ளார்.
மூர்த்தி இல்லாத இன்போசிஸை காண தகவல் தொழில் நுட்பத் துறையினர் கூடுதல் எதிர்பார்ப்புடன்காத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications