சென்னை-ஹைதராபாத் ரயிலில் பயங்கர தீ:5 பெட்டிகள் சாம்பல் - 100 பயணிகள் தப்பினர்!
ஹைதராபாத்:
சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இதில் 5 பெட்டிகள் எரிந்து சாம்பலாயின. அதிர்ஷ்டவமாக அந்தப் பெட்டிகளில் இருந்த 100 பயணிகளும்உயிர்தப்பினர்.
சென்னையிலிருந்து ஹைதராபாத செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை வழக்கம் போல சென்னை சென்டிரல்ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது. இன்று காலை 5.30 மணிக்கு ஹைதராபாத்தை ரயில்அடைந்திருக்க வேண்டும்.5 மணியளவில் செகந்திராபாத் அருகே ரயில் போய்க் கொண்டிருந்தபோது, எஸ்.6 என்ற பெட்டியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்தத் தீ மளமளவென மற்ற பெட்டிகளுக்கும் பரவியது. தீ கொளுந்து விட்டு எரிந்ததால்அடுத்தடுத்து 5 பெட்டிகளில் தீ பரவியது.
தீ பரவியதும், ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதையடுத்து தீ பரவிய பெட்டிகளில் இருந்தபயணிகள் அலறி அடித்துக் கொண்டு அவசரம் அவசமரமாக ரயிலை விட்டு இறங்கி உயிர்தப்பினர். நல்லவேளையாக பெட்டிகளில் இருந்த 100 பயணிகளும் சாதுரியமாக இறங்கி விட்டதால், உயிரிப்போ, காயமோஏற்படவில்லை.
5 பெட்டிகளில் பரவிய தீ மற்ற பெட்டிகளுக்கு பரவாத வகையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டுதீயை அணைத்தனர். இந்த பயங்கர தீ விபத்தில் ரூ.2.5 கோடி மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த தீ விபத்துக்கு நாச வேலை காரணமாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீஸார்விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications