ஈழப் பிரச்சினை தீராததற்கு நானா காரணம்? வைகோ மறுப்பு
தென்காசி:
ஈழத்திற்கு நான் ரகசிய பயணம் மேற்கொண்டதால் தான் அமைதித் தீர்வு தடை பட்டுப் போனது என்று முதல்வர்கருணாநிதி கூறியிருப்பது சுத்தப் பொய் என்று மதிக பாதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தமிழகசட்டசபையில் நேற்று முதல்வர் கருணாநிதி பேசுகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, என்னைஅழைத்து இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். நீஙகள் முரசொலி மாறன், வைகோவை அழைத்துக்கொண்டு வவுனியா சென்று பிரபாகரனை சந்தித்துப் பேசுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.ஆனால் அதற்குள் வைகோ ரகசியமாக இலங்கை சென்றதால் அந்த முயற்சி
தோல்வியில் முடிந்ததாக குறிப்பிட்டரார்.
இதை வைகோ மறுத்துள்ளார். குற்றாலத்தில் நடந்த மதிமுக இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணிகலந்துரையாடல் கூட்டத்தில் வைகோ பேசுகையில், நான் வவுனியா காட்டுக்குச் சென்றதால் தான் ஈழப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் போனதாக கருணாநிதி கூறியுள்ளார்.
அவருக்குத் தெரியாமல் நான் போனது போலவும், பிரதமர் ராஜீவ் காந்தி என்னையோ அல்லது மாறனையோஅழைத்துக் கொண்டு கொழும்பு வழியாக காட்டுக்குச் சென்று தீர்வு காண சொன்னதாகவும் கூறியுள்ளார்.
கடந்த 1989ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காலை நான் வவுனியாவுக்குக் கிளம்பியபோது, அதை ஒருகடிதம் மூலம்அனைத்து விவரங்களையும எழுதிக் கொடுத்து விட்டுத்தான் சென்றேன். அந்தக் கடிதம் பிப்ரவரி மாதம் 7ம் தேதிகாலையில் அவரிடம் சேர்ப்பிக்கப்பட்டு விட்டது. அதன் பிறகுதான் அவர் டெல்லிக்கே சென்றார்.
ராஜீவ்காந்தியும், மாறனும் இப்போது உயிருடன் இல்லை. எனவே அவர்களைப் பற்றி நான் பேசவிரும்பவில்லை. கருணாநிதி கூறியது அப்பட்டமான பொய். என்னை பேச வைக்காதீர்கள். பல விஷயங்களைமனதோடு வைத்துள்ளேன்.
வவுனியா காட்டுக்கு நான் சென்று கெடுத்து விட்டது போல இப்போது அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ார்.என்னைக் களங்கப்படுத்த நினைத்தால் அது நடக்காது என்றார் வைகோ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications