மின் உற்பத்தி-தன்னிறைவ நோக்கி தமிழகம்

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்:

கடந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டிருந்த 1,000 கோப்புகள் கருணாநிதிமுதல்வர் பொறுப்புக்கு வந்த பின்னர் தான் கையெழுத்திட்டு கிளியர் செய்யப்பட்டனஎன மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

திருவளளூர் மாவட்டம் அல்மாத்தியில், ரூ. 150 கோடி மதிப்பிலான 400 கிலோவோல்ட் திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதைஆற்காடு வீராசாமி தொடங்கி வைத்து பேசுகையில், கடந்த திமுக ஆட்சி காலத்தில்இந்த திட்டதிதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சி இதைநிறைவேற்ற அக்கறையே காட்டவில்லை.

கடந்த 2 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் 1,000 கோப்புகள் அப்படியே கிடப்பில்போடப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம் தற்போது முதல்வர் கருணாநிதிகையெழுத்திட்டு செயல்பாட்டுக்கு அனுப்பி உள்ளார்.

உபரி மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் தமிழ்நாடுமின்சார வாரியம் அதிக வருவாய் ஈட்ட முடியும். இந்தியாவைச் சேர்ந்த பலவெளிநாட்டு தொழிலதிபர்கள் தமிழகத்தில் மின்துறையில் முதலீடுகள் செயயமுன்வந்துள்ளனர்.

இதன் மூலம் தமிழகம், கருணாநிதி தலைமையில்முதலீட்டுக்கு சிறந்த மாநிலமாகஉருவாகி வருவதை உணரலாம். 2011ம் ஆண்டுக்குள் தமிழகம் மின்சார உற்பத்தியில்20,000 மெகாவாட் என்ற இலக்கை எட்டிவிடும். மின் உற்பத்தியில் தன்னிறைவுபெற்ற மாநிலமாக மாறி விடும்.

தற்போது அலமாத்தியில்தொடங்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தால் சென்னைமற்றும் புறநகர்ப் பகுதிகள் பலனடையும் என்றார் வீராசாமி.

சுகாதாரத்துறைக்கு கூடுதலாக ரூ. 300 கோடி:

நடப்பு ஆண்டில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் திட்டங்களுக்காக தமிழக அரசு பட்ஜெட்டில் கூடுதலாக ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழகசுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த எம்.வி. நீரிழிவு மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தின் சார்பில் வழங்கப்படும் டிஆர்சி தங்க பதக்கம், இந்த ஆண்டு ஆக்ஸ்போர்ட்பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் ரிச்சர்ட் மாத்யூஸுக்கு வழங்கப்பட்டது.

அமைச்சர் ராமச்சந்திரன் பதக்கத்தை வழங்கி பேசுகையில்,

சர்க்கரை வியாதியின் தீவிரத்தை உணர்ந்து சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சர்க்கரை வியாதி சிகிச்சைக்கென தனி துறையைநிறுவ தமிழக அரசு உத்தரவிடடுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் இந்த வியாதிக்கு வழங்கப்படும் சிகிச்சைக்கு இணையாக அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டில், சுகாதாரம் மற்றும் குடும்பநலத் திட்டங்களை நிறைவேற்ற பட்ஜெட்டில் கூடுதலாக ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் அப்போலோ மருத்துவனை சிறுநீரகவியல் பிரிவுத் தலைவர் டாக்டர் எம்.கே.மணிக்கு பேராசிரியர் எம்.விஸ்வநாதன் தஙக்ப் பதக்கம்வழங்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+