இலங்கை: சர்க்காரியா பரிந்துரை அடிப்படையில்ஆட்சி முறை- இந்தியா புது யோசனை
டெல்லி:
இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியாவில் உள்ளது போன்ற அதிகாரப் பகிர்வு கொண்ட ஆட்சி முறையைஏற்படுத்தலாம் என இலங்கை அரசுக்கு இந்தியா யோசனை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பரிசீலிக்க சர்க்காரியா கமிஷன்அறிக்கை நகலை இலங்கை அரசுக்கு இந்தியா வழங்கியுள்ளது.
இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை முற்றி வருகிறது. ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நிடைபெறம்கடும் சண்டையால் பலர் பலியாகி வருகின்றனர். புலிகளை தாக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவித் தமிழர்களை கொன்றுகுவித்து வருகிறது இலங்கை.இந் நிலையில்இ இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.தமிழகமுதல்வர் கருணாநதி உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்களும் இப் பிரச்சினையில் இந்தியா தலையிட்டு இலங்கைத்தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
இந் நிலையில் மத்திய அரசு இப் பிரச்சினையில் காட்டி வந்த மெளனத்தை சற்றே கலைந்துள்ளது. இலஙகப்ை பிரச்சினைக்குஅரசியல் தீர்வு காண்பதறகாக சில யோசனைகளை இலங்கை அரசுக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்தியாவில் உள்ளது போன்ற மத்திய அரசு, மாநில அரசு என்ற ஆட்சி முறையை இலங்கையிலும் கொண்டுவரலாம். இந்தியாவில் உள்ளது போல மாநிலங்களுக்கு ஆட்சி அதிகாரத்தைத் தகலாம் என்று இந்தியா யோசனைதெரிவித்துள்ளது.
இப்போது இலங்கையில் மாநிலங்களோ, மாகாணங்களோ இல்லை, அவற்றுக்கு தனி அரசுகளும் இல்லை, ஒரே மத்தியஅரசிடம் தான் எல்லா அதிகாரமும் குவிந்து கிடக்கிறது.
அதிகாரப் பகிர்வு தொடர்பாக இலங்கை அரசுக்கு உதவுவதற்காக, சர்க்காரியா கமிஷன் அறிக்கையின் நகல் ஒன்றை இலங்கைஅரசுக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகளின் அதிகாகரப் பகிர்வு குறித்து மிகவும் விரிவாகவிளக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுதொடர்பாக உதவ அரசியல் சட்டவல்லுனர்களையும் இலங்கைக்கு அனுப்பி வைக்கத் தயாராக இருப்பதாகஇந்தியா தெரிவித்துள்ளது.
அனைத்துப் பிரிவினரையும் சமூகத்தினரையும் திருப்திப்படுத்தும் வகையிலான அரசியல் சீர்திருத்தத்தை மேற்கொள்ளஇலங்கை தயாராகவேண்டும் என்றும் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
ஆனால், இந்தியாவின் யோசனை குறித்து இலங்கை அரசு எந்த பதிலையும் அனுப்பவில்லை.
இலங்கைக்கு யோசனை கூறியுள்ளபோதிலும், இப் பிரச்சினையில் நேரடியாக தலையிடுவதை தற்போதைக்கு இந்தியாதவிர்க்கும் என்றே தெரிகிறது.
இலங்கைக்கு ராணுவரீதியிலான உதவியையயோ, பேச்சுவார்த்தையிலோ இந்தியா பங்கேற்காது, உதவி செய்யாது எனவும்இலங்கைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகோதர யுத்தம் வேண்டாம்: கருணாநிதி
இதற்கிடையே, ஈழப் பிரச்சினை தொடர்பாக தமிழக கட்சிகளுக்குள் சகோதர யுத்தம் வேண்டாம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் இன்று பேசுகையில், விடுதலைப புலிகளுக்கு ஆதரவாக பேசுவோரை கைது செய்ய வேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட மதிமுக உறுப்பினர் கண்ணப்பன், விடுதலைப் புலிகளுக்கு தார்மீக ஆதரவு கொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று உச்சநீதிமனறமே கூறியுளளது. ஈழத் தமிழர் போராட்டத்தை மட்டுமே மதிமுக ஆதரிக்கிறது. தனித் தமிழ்நாடு பிரிவினை கோரிக்கையை மதிமுக ஒருபோதும்ஆதரிக்காது என்றார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் கருணாநிதி, ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுவதில் நாம் அனைவருக்கும் ஒருமித்த கருத்து உள்ளது. அதைக்கெடுத்து விடும்வகையில், நமக்குள் சகோதர யுத்தம் புரிய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
கருணாநிதிக்கு நட்வர் சிங் நன்றி
இந் நிலையில் இலங்கை விவகாரத்தில் தன்னைக் குறிப்பிட்டு பேசிய கருணாநிதிக்கு முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் தொலைபேசி மூலம்நன்றி தெரிவித்துள்ளார்.
1989ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உத்தரவின்படி தமிழ்நாடு இல்லத்தில் தன்னைச் சந்தித்து இலங்கைப் பிரச்சனை பற்றி நட்வர் சிங் பேசியதுகுறித்து, கருணாநிதி ஆகஸ்ட் 19ம் தேதி சட்டப் பேரவையில் பேசினார்.
அதில் தனது பெயரை நினைவூட்டிப் பேசியதற்காக கருணாநிதிக்கு தொலைபேசி மூலம் நட்வர்சிங் நன்றி தெரிவித்தார்.
இராக் எண்ணெய்க்கு உணவு திட்டத்தில் நடந்த ஊழல் தொடர்பான பாதக் விசாரணைக் கமிஷன் அறிக்கைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில்தான் நட்வர் சிங் நீக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications