பறக்கும் விமானத்தில் சென்னை பெண்ணிடம்கேரள அமைச்சர் சில்மிஷம்
திருவனந்தபுரம்:
சென்னையிலிருந்து கொச்சிக்கு சென்ற விமானத்தில் பயணம் செய்த பெண்ணிடம்,கேரள அமைச்சர் ஜோசப் சில்மிஷம் செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த 3ம் தேதி சென்னையிலிருந்து கொச்சிக்கு கிங்பிஷர் விமானம் சென்றது.அதில் கேரள பொதுப் பணித்துறை அமைச்சர் ஜோசப் பயணம் செய்தார். அவருக்குமுன் இருக்கையில் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் அமர்ந்திருந்தார்.
![]() |
விமானம் டேக்-ஆப் ஆகும்போது உள்ளே விளக்குகள் டிம் செய்யப்பட்டன.அப்போது தனக்கு முன் சீட்டில் அமர்ந்திருந்த பெண்ணை சீட்களுக்கு இடையேகையை விட்டு அந்த விஐபி கட்டிப் பிடித்துள்ளார்.
இதையடுத்து அந்தப் பெண் எழுந்து கத்தவே ஏர்-ஹோஸ்டஸ் ஓடி வந்துள்ளார்.தன்னை பின்னால் அமர்ந்திருப்பவர் கட்டிப் பிடித்ததாக அந்தப் பெண் கூறவே,அந்தப் பெண்ணை வேறு சீட்டில் அமர வைத்துள்ளார் ஏர் ஹோஸ்டஸ்.
இந்த வேலையைச் செய்தது அமைச்சர் என்பதால் அமைதியாகிவிட்ட ஏர் ஹோஸ்டஸ்இந்த விஷயத்தை பைலட்டிடமும் கூறியுள்ளார்.
விமானம் கொச்சியை அடைந்ததும் அந்தப் பெண் தன்னை கட்டிப்பிடித்த அந்த நபரைமுறைத்துள்ளார். ஆனால், அமைச்சரோ ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி பேப்பர்படித்துக் கொண்டிருந்தாராம்.
இதையடுத்து கொச்சியில் தரையிறங்கியதும் அந்தப் பெண் விமான நிலையஅதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். ஆனால், இந்த விவகாரத்தை மூடி மறைக்கஅதிகாரிகள் மட்டத்தில் பெரும் முயற்சி நடந்துள்ளது. இருப்பினும் இப்போதுவெளியில் கசிந்துவிட்டது.
இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என அந்தப் பெண் மிரட்டப்பட்டதாகவும்தெரிகிறது.
மேலும் இந்தச் சம்பவம் நடந்தது உண்மை தான் என கிங்பிஷர் விமானத்தின்பைலட்டும் கூறியுள்ளார்.
சமீபத்தில் தான் தன் மீதான ஊழல் வழக்கில் இருந்து அமைச்சர் ஜோசப்விடுதலையானார். இந் நிலையில் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர் கேரளாகாங்கிரஸ் (ஜோசப் பிரிவு) கட்சியின் மாநிலத் தலைவரான இவர் இப்போதுஇடதுசாரிக் கூட்டணி ஆட்சியில் இடம் பெற்று அமைச்சராக உள்ளார்.
இடுக்கி மாவட்ட தொடுபுழா தொகுதியைச் சேர்ந்த ஜோசப், தன் மீதான இந்தப்புகார்களை மறுத்துள்ளார். இது ஒரு அரசியல் சதி என்று கூறியுள்ளார்.
இது குறித்து கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறுகையில், இது தொடர்பாக புகார்வந்தால் விசாரிப்பேன் என்றார்.
இதற்கிடையே, அச்சுதானந்தன் தனது கொச்சி பயணத்தை ரத்து செய்துவிட்டுதிருவனந்தபுரத்திலேயே உள்ளார். ஜோசப்பை சந்திக்கத்தான் அவர் தனது பயணத்தைரத்து செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்













Click it and Unblock the Notifications