சிட்னி சதி-பாக் பொறியாளருக்கு 20 ஆண்டு சிறை
சிட்னி:
சிட்னியில் குண்டு வெடிப்புகளை நடத்த சதித் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணருக்கு20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுல்ளது.
பாகிஸ்தானில் பிறந்து ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர் பஹீம் காலித் லோதி.இவரது சிட்னி வீட்டை கடந்த 2003ம் ஆண்டு ஆஸ்திரேலிய போலீஸார்சோதனையிட்டபோது, தீவிரவாத அமைப்புகளின் பிரசாரங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் சிக்கின. இதையடுத்து காலித்தை போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.அப்போது சிட்னி நகரில், குண்டுவெடிப்புகளை நிகழ்த்த காலித் சதித்திட்டம்தீட்டியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது நியூ சவுத் வேல்ஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி அந்தோணி வீலி, புதன்கிழமை தீர்ப்பளித்தார். அதில் 36வயதான காலித்துக்கு அதிகபட்சம் 20 வருட சிறைதண்டனை விதிப்பதாகஉத்தரவிட்டார்.
காலித் மீது கூறப்பட்ட புகார்களில் 3 நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில்தெரிவித்துள்ளார். சிட்னி நகர மின் வினியோகம் குறித்த வரைபடம், குண்டு தயாரிப்புதொடர்பான தகவல்களை வைத்திருந்தது, கொடிய விஷங்களைத் தயாரிப்பதுதொடர்பான ஆவணஙக்ளை வைத்திருந்தது ஆகிய மூன்று புகார்களும்நிரூபிக்கபபட்டதால் காலித்துக்கு இந்தத் தண்டனை அளிக்கப்பட்டதாகதெரிவிக்கப்படடுளது.
கடந்த 1996ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்தார் காலித். கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க்கில் நடந்த தீவிரவாதத்தாக்குதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில தீவிரவாதத் தடுப்புச் சட்டம்கடுமையாக்கப்பட்டது.
அந்தச் சட்டத்தின் கீழ் தான் காலித் கைது செய்யப்பட்டார். அந்த சட்டத்தின் கீழ்தண்டனை விதிக்கப்பட்ட மதல் ஆஸ்திரேலியர் காலித் என்பது குறிப்பிடத்ததக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications