யாழ்பாணத்தில் அமைதி- திரிகோணமலையில் சண்டை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

கிட்டத்தட்ட இரு வாரத்துக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் பெரிய அளவில் சண்டைஏதும் இல்லாமல் அமைதி திரும்பியுள்ளது.

ஆனால் கிழக்கில் உள்ள திரிகோணமலையில் 2 ராணுவ முகாம்களை விடுதலைப்புலிகள் தாக்கியுள்ளனர்.

மாவிலாறு தடுப்பணையின் மதகுகளை விடுதலைப் புலிகள் மூடியதைத் தொடர்ந்துராணுவத்திற்கும், புலிகளுக்கும் கடும் சண்டைதொடங்கியது. கடந்த நான்குஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான தாக்குதலை புலிகள் மேற்கொண்டனர்.

திரிகோணமலை துறைமுகத்தில் தாக்குதலைத் தொடங்கிய புலிகள்,யாழ்ப்பாணத்தையும் முற்றறுகையிட்டு சரமாரியாக ராணுவத்தை தாக்கத்தொடங்கினர். பல ராணுவ நிலைகள் தகர்க்கப்படடன.

ராணுவமும் பதிலுக்கு கடும் தாக்குதலை மேற்கொண்டது. ஆனால், புலிகளோடுமோத முடியாமல் அப்பாவித் தமிழர்களை தாக்கி கொன்றது.

யாழ்ப்பாணத்தை சுற்றிலும் முற்றுகையிட்ட புலிகள், உள்ளே ஊடுறுவ ஆயத்தமாகிவருகின்றனர்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் லட்சக்கணக்கான தமிழர்களை கேடயமாக வைத்துக்கொண்டு புலிகளிடம் இருந்து தப்ப முயன்று வருகின்றனர். இதனால் தமிழர்களையாழ்பாணத்தை விட்டு வெளியே விடாமல் தடுத்து வருகின்றனர்.

யாழ்பாணத்தில் ராணுவத்தினரை தாக்கினால் தமிழர்கள் பெருமளவில் உயிரிழக்கும்நிலை உள்ளது. இதனால் விடுதலைப் புலிகள் தங்கள் தாக்குதலை தணித்துக்கொண்டுள்ளனர்.

இந் நிலையில் கடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் சண்டை சற்றேஓய்ந்துள்ளது. குறிப்பிடதக்க அளவிலான தாக்குதல் ஏதும் இன்று நடைபெறவிலலைஎன்று ராணுவம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் திரிகோணமலையில் 2 ராணுவ முகாம்கள் மீது புலிகள தாக்குதல்நடத்தியுள்ளனர். இதில் யாரும் பலியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கொழும்பு துறைமுகத்திலிருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு செஞ்சிலுவைச் சங்க கப்பல் ஒன்று யாழ்ப்பாணத்திற்கு கிளம்பியுள்ளது.

இந்தக் கப்பலுக்கு தாங்கள் அனுமதி கொடுத்துள்ளதாக விடுதலைப்புலிகளின்சமாதான செயலக தலைவர புலித்தேவன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

இதுவரை நாங்கள் தற்காப்பு தாக்குதலை மட்டுமே மேற்கொண்டுள்ளோம். எங்கள்மீது தாக்குதல் நடத்தியதால் அதற்குரிய பதிலடியைக் கொடுத்தோம், தொடர்ந்துகொடுப்போம் என்றார்.

இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு புலிகள் முன் வர வேண்டும் என்று அதிபர்ராஜபக்ஷே விடுத்துள்ள கோரிக்கை குறித்து விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுேதலைவர் சுப.தமிழ்ச் செல்வன் பதில்அளிததுள்ளார்.

அவர் கூறுகையில், இலங்கையின் கிழக்குப் பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டில்உள்ள பகுதிகளை தன் வசப்படுத்த சிங்கள ராணுவம் நீண்ட காலமாகவேதிட்டமிட்டிருந்தது. மாவிலாறு அணை பிரச்சினை ஏற்பட்டதும், சிங்கள அரசாங்கமே,விடுதலைப் புலிகளுக்கு எதிராக பெரிய ராணுவ நடவடிக்கையை தொடங்கியது.

மாவிலாறு பிரசசினை சிறியதுதான். ஆனாலும், சிங்களஅரசு வலிய வந்துதாக்குதல்களைத் தொடங்கியது. இதற்கு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரேசாட்சி.

எங்களது கட்டுப்பாட்டில்உள்ள மூதுர் பகுதியில் பெருமளவு ஆயுத பலத்துடன்தாக்குதல் நடத்த சிங்கள ராணுவம் பல மாதங்களுக்கு முன்பேதிட்டமிட்டு விட்டது.எனவே தான் மாவிலாறு பிரச்சினை தொடங்குவதற்கு முன்பே கிழக்குப் பகுதியில்விமானப் படை தாக்குதலை சிங்கள அரசு மேற்கொண்டது.

மாவிலாறு பிரச்சினை வந்ததும், தண்ணீர் திறந்துவிடவே தாக்குதல் என கூறியதுசிங்கள அரசு. மேலும் ராணுவ நடவடிக்கையையும் தீவிரப்படுத்தியது. ஒருநோக்கத்துடன் இந்த தாக்குதலை சிங்கள விமானப்படை நடத்துவதாக நாங்கள்உணர்ந்தோம்.

திரிகாணமலை கடற்படைத்தளத்தில் இருந்து சிங்கள ராணுவம் தாக்குதல்நடவடிக்கையை தீவிரப்படுத்தியது. படைகளையும் முன்னெடுக்க ஆரம்பித்தது.இதைத் தடுக்கத்தான் நாங்கள் ராணுவம் மீது பெரும் தாக்குதலை நடத்த வேண்டியநிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதுவே மோதல் தீவிரமடைய காரணம்.

மட்டக்களப்பு, யாழ்ப்பாணத்தில் தாக்குதல் தீவிரமடைய ராணுவமே காரணம். கிளாசி,நாகர்கோவில், கமலை, எழுதுமட்டுவாள் ஆகிய பகுதிகளில் சிங்கள ராணுவம் கடந்தவெள்ளிக்கிழமை கடும் தாக்குதல்களை நடத்தியது. இதற்காக மக்கள்நடமாட்டங்களை வரையறுத்து தாக்குதலை நடத்தினர்.

இதை நாங்கள் உளவுப்படை மூலம் அறிந்தோம். சிங்களப்படை எத்தகைய தாக்குதல்நடத்தினாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருந்தோம். இப்போது சிங்களராணுவத்தின் தாக்குதல்தளை தோற்கடித்துள்ளோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+