தலித் பள்ளி மாணவிகளுக்கு இலவச சுடிதார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு பள்ளிசீருடைகளான சுடிதார்கள் இலவசமாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இன்று சட்டசபையில் ஆதி திராவிடர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கைகளுக்கு பதிலளித்துப் பேசியஅமைச்சர் தமிழரசி,

8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் தலித் மாணவர்களுக்கு கால் சட்டைகள் இலவசமாகவழங்கப்படும்.

6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு பள்ளி சீருடையாகசுடிதார்கள் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ. 2.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆதி திராவிட மற்றும் பழங்குடியினருக்கான நலப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு (ஒன்றாம்வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை), ஆதி திராவிட நலத்துறையின் விடுதிகளில் தங்கிப் படிப்போருக்கும்வருடத்துக்கு இரு சீருடைகளும் அதற்கான தையல் கூலியும் வழங்கப்படும்.

இதன் மூலம் 3.45 லட்சம் மாணவ, மாணவிகள் பலனடைவார்கள்.

கிருஸ்துவ மதத்துக்கு மாறிய தலித்களுக்கு உதவ ரூ. 25 கோடி முதலீட்டில் புதிய உதவித் திட்டம்அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் ரூ. 50 கோடி உதவி நிதி இந்து மதத்தைச் சேர்ந்த தலித்களுக்கு மட்டுமேபயன்படுத்தப்படுகிறது. இதனால் தலித் கிருஸ்துவர்களுக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் தான் தலித்கிருஸ்துவர்களுக்கு தனியாக உதவித் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+