வருமான வரி வழக்கு: ஜெ-சசி மீது நாளை குற்றச்சாட்டுகள் பதிவு
சென்னை:
வருமான வரி கணக்குகள் காட்டாதது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீதான 4வழக்குகளில் நாளை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவுள்ளன. இதையொட்டிஇருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க அனுமதி கேட்டு ஜெயலலிதாவும், சசிகலாவும் உயர் நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் 1993-1994ம் ஆண்டு வருமானக்கணக்குகள் வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்யவில்லை என்றும், அவர்கள் பங்குதாரர்களாக இருந்த சசிஎண்டர்பிரைசஸ் நிறுவனம் 1992-1993ம் ஆண்டு வருமானக் கணக்கு காட்டவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
அதுதொடர்பாக ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீது வருமான வரித்துறை சார்பில் எழும்பூர் பொருளாதாரகுற்றவியல் நீதிமன்றத்தில் 4 வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்க கோரி,ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
வழங்குகளில் நாளை குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவுள்ளது. ஜெயலலிதாவும், சசிகலாவும் ஆஜராகஉத்தரவிடப்பட்டுள்ளது. ஆால், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில்ஜெயலலிதாவும், சசிகலாவும் எற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
ஜெ-சசியின் இந்த மனுவுக்கு வருமானவரித்துறை சார்பில் பதில் மனுவும், புதிய மனுவும் நேற்று தாக்கல்செய்யப்பட்டன. அவற்றை வக்கீல் ராமசாமி தாக்கல் செய்தார்.
அதில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் தங்களை வருமான வரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுதள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. கிரிமினல் நடைமுறைச் சட்டம் பிரிவு 397 (2)ன் படி மறுசீராய்வு மனுவைஉயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது. எனவே அதை தள்ளுபடி செய்ய வேண்டும். வழக்கை விரைவில்முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகவே எழும்பூர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க கூடாது.வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில் ஜெயலலிதா, சசிகலா சார்பில், புதிய மனு ஒன்றை எம்.பி.சண்முகசுந்தரம் நேற்று அவசரஅவசரமாக தாக்கல் செய்தார். அதில், எழுப்பூர் நீதிமன்றத்தில வழக்கு விசாரணை 25ம் தேதி நடக்கிறது. அதில்ஜெயலலிதாவும், சசிகலாவும் ஆஜராகாமல் இருக்க அனுமதி அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கோப்புகளைஅவர்களுக்கு தர வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ரவிராஜபாண்டியன் முன் இன்று விசாரணைக்கு வருகிறது. இம்மனு விசாரணை முடிவில் தான்.நாளை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவும், சசிகலாவும் ஆஜராவார்களா என்பது தெரிய வரும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications