விமானத்தில் பெண்ணிடம் சில்மிஷம்: அமைச்சர் மீது விசாரணைக்கு உத்தரவு
திருவனந்தபுரம்:
சென்னையிலிருந்து கொச்சி சென்ற விமானத்தில் முன்னாள் தனியார் டிவி நிறுவனசெய்தி வாசிப்பாளர் லட்சுமி கோபகுமாரிடம் சில்மிஷம் செய்ததாக சர்ச்சையில்சிக்கியுள்ள கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் விவகாரம் குறித்துவிசாரணைக்கு அம்மாநில முதல்வர் அச்சுதானந்தன் உத்தரவிடடுள்ளார்.
![]() |
சென்னையிலிருந்து கொச்சி சென்ற விமானத்தில், பயணம் செய்த லட்சுமிகோபகுமாரை, அவரது இருக்கைக்குப் பின்புறம் இருந்து கையை விட்டு சில்மிஷம்செய்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஜோசப். இந்தப் புகாரை அவர் மறுத்துள்ளார்.இதுஅரசியல் சதி எனவும் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் அச்சுதானந்தனையும் சந்தித்து விளக்கினார். என் மீதானபுகார் நீரூபிக்கப்பட்டால் நான் அரசியலிலிருந்து விலகுகிறேன் என்றும் சவால்விட்டார். இந்தநிலையில், மகளிர் காங்கிரஸ் இப்பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டது. பிரச்சினையை பெரிதுபடுத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
![]() |
இதனால் ஜோசப் மீது நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமேலிடம் அச்சுதானந்தனை அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்துஅமைச்சரவைக் கூட்டத்தை அச்சுதானந்தன் கூட்டி விவாதித்தார். அந்த கூட்டத்திற்குப்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியான ஐ.ஜி.சந்தியா இந்தப் புகார் குறித்து விசாரிக்கவுள்ளார்.10 நாட்களில் என்னிடம் விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பார். விசாரணை முடிந்துமுடிவுகள் தெரியும் வரை ஜோசப் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட மாட்டாது.
அவர் தொடர்ந்து அமைச்சராக செயல்படுவார். இந்தப் பிரச்சினை தொடர்பாகசம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் கொடுத்துள்ள பேட்டியை நான் சாதாரணமாகஎடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அமைச்சர் ஜோசப் மீதான விவகாரத்தைஅமைச்சரவை விவாதித்தாலும் கூட விசாரணை நடத்த உத்தரவிட்டது எனது சொந்தவிருப்பத்தின் பேரில் தான் என்றார் அச்சுதானந்தன்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்














Click it and Unblock the Notifications