உதவிக்காக தவிக்கும் யாழ்பாணத் தமிழர்கள்
கொழும்பு :
யாழ்ப்பாணத்தில் நிவாரணத்திற்காக தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு உதவிப்பொருட்களை ஏற்றிக் கொண்டு கொழும்பிலிருந்து புறப்பட்ட செஞ்சிலுவைச் சங்கக்கப்பல் யாழ்ப்பாணத்தை அடைந்துள்ளது.
2002ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர்நிநறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னர் கடந்த 3வாரங்களாக இலங்கையின் வடக்கு மற்றும்கிழக்குப் பகுதியில் ராணுவம், விடுதலைப்புலிகளும் கடும் சண்டையில் ஈடுபட்டு வந்தனர்.இந்த சண்டை சற்றே ஓய்ந்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் சிக்கியுள்ளவர்களுக்குஉதவுவதற்காக செஞ்சிலுவைச் சங்கம் கப்பல் மூலம் நிவாரணப் பொருட்களைஎடுத்துச் செல்ல முடிவு செய்தது. இதற்கு விடுதலைப் புலிகளும் ஒப்புதல் தந்தனர்.
இதையடுத்து கொழும்பிலிருந்து கிளம்பிய கப்பல் கிட்டத்தட்ட இலங்கையைசுற்றிக்கொண்டு யாழ்பாணத்தை அடைந்தது. இன்னொரு கப்பல்திரிகோணமலையிலிருந்துயாழ்ப்பாணத்திற்குச் சென்று கொண்டுள்ளது. இந்தக் கப்பல்மூலம் யாழ்ப்பாணத்தில் சிக்கியுள்ள 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள்மீட்கப்படவுள்ளனர்.
நிவாரணக் கப்பல் யாழ்ப்பாணத்தை அடைந்துளள போதிலும், உணவுப்பற்றாக்குறையால் தவித்து வரும் 5 லட்சம் தமிழர்களின் துயரததிற்கு நிவாரணம்கிடைக்குமா என்று தெரியவில்லை.
இந் நிலையில் இன்று இலங்கை அரசு புதிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது.திரிகோணமலை துறைமுக பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் விலக வேண்டும்என்பதே அந்தக் கோரிக்கை. இதை விடுதலைப் புலிகள் ஏற்க மாடடார்கள் என்றுதெரிகிறது.
இதற்கிடையே போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் விடுதலைப் புலிகளின்பிரதிநிதிகளை கிளிநொச்சியில் நாளை சந்தித்துப் பேசவுள்ளனர்.
தமிழ் பாதிரியாரை கடத்திய ராணுவம்:
இந் நிலையில் கொழும்பு யாழ்ப்பாணம் அருகே கிறிஸ்தவ தேவாலயம் மீதுஇலங்கை ராணுவம் நடத்திய குண்டு வீச்சில் 15 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில்முக்கிய சாட்சியாக விளங்கும் தேவாலய பாதிரியாரை காணவில்லை. அவரைராணுவம் தான் கடத்தியிருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
இந்த மாதத் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் அருகே அல்லைப் பிட்டி என்ற இடத்தில்உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இலங்கை விமானப்படை குண்டு வீசித் தாக்குதல்நடத்தியது. இந்தத் தாக்குதலில் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த 15 தமிழர்கள்பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்தகொடூர சம்பவத்திற்கு அந்த தேவாலயத்தின் பாதிரியாரான திருச்செல்வம் நிகல்பிரவுன் என்பவர்தான் முக்கிய சாட்சியாக இருந்தார். இந்த நிலையில் பாதிரியார்திருச்செலவமும், அவரது உதவியாளரும் கடந்த 20ம் தேதி முதல் காணவில்லை.
தேவாலயத் தாக்குதல் தொடர்பானமுழு விவரமும் பாதிரியாருக்குத் தெரியும்என்பதால் ராணுவம்தான் அவரைக் கடத்தியிருக்க வேண்டும் என வடக்கு கிழக்குமனித உரிமைகள் அமைப்பின் செயலகம் குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கிடையயே, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அறிவிக்கப்படாத பொருளாதாரத்தடையை இலங்கை அரசு அமல்படுத்தியிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பைச்சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசன் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில், ராணுவத்தினர் செய்த கெடுபிடியால், உரிய நேரத்தில்மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாமல், 3 சிறுவர்கள் பரிதாபமாகஉயிரிழந்ததாக சிவனேசன் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications